Home
Mobile

Samsung வெச்சான் பாரு.. ரூ.22,000-க்கு எகிறுது.. இனி எல்லாம் பிரீமியம்.. கேலக்ஸி எஸ்26 எப்இ போன் விலை எப்படி?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சீரிஸ் மாடல்கள் வெளியான பிறகு எப்இ மாடல்கள் வெளியாவது வழக்கமாக இருக்கும். இது மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் இருக்கும். ஆகவே, இதற்காக தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். ஆனால், சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ (Samsung Galaxy S26 FE) ஸ்மார்ட்போன் அப்படி இருக்காது என்பது தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போன் ரூ.59,999 பட்ஜெட்டில் வெளியாகியது. இது முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் ரூ.80,999 விலையில் இருந்து ரூ.21,000 ஆக கம்மியாக இருக்கிறது. இதனாலேயே மிட்-ரேஞ்ச் பிரியர்களிடையே எப்இ மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது.

Samsung வெச்சான் பாரு.. ரூ.22,000-க்கு எகிறுது.. எல்லாம் பிரீமியம்!

ஆனால், சாம்சங் கேலக்ஸி எஸ்26எப்இ ஸ்மார்ட்போன் இதே போல கம்மியாக இருக்காது என்பது தெரிகிறது. ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இது சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் விலை விட மிகவும் கம்மியாக தோன்ற வைக்கவில்லை. சாம்சங் கேலக்ஸி எஸ்26 போனின் விலை ரூ.89,999 ஆக இருக்கிறது.

இப்படி இருக்கையில், சாம்சங் கேலக்ஸி எப்26 எப்இ ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.82,000 பட்ஜெட்டிலும், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.88,000 பட்ஜெட்டிலும் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் விலையை விட ரூ.7,999 மட்டுமே கம்மியாக இருக்கிறது.

ஆகவே, பீச்சர்களில் அப்கிரேட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.65,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ரூ.77,999 ஆக இருக்கிறது. இதைவிட கூடுதல் விலைக்கு கேலக்ஸி எஸ்26 எப்இ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலுஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெகா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400 4என்எம் (Deca Core Samsung Exynos 2400 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Samsung Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.

ஒன்யுஐ 8 (One UI 8) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 பேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4900mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் கேலக்ஸி ஏஐ பீச்சர்கள் வருகின்றன. இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்டு கேலக்ஸி எப்இ26 மாடலில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 FE Launch Timeline Leaks Price Higher Than Samsung Galaxy S25 FE
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X