மார்க்கெட்டே அதிர போகுது.. ஆகஸ்ட் 27-ல் களமிறங்கும் புது Samsung 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற உள்ள Samsung Galaxy Event எனும் நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ (Samsung Galaxy S26 FE) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த புதிய சாம்சங் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S26 FE Specifications): தரமான 3.2ஜிகாஹெர்ட்ஸ் GPU Deca-Core சாம்சங் எக்ஸ்நோஸ் 2500 3எம்எம் பிராசஸர் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ போன் அறிமுகமாகும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் Xclipse 950 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340×1080 பிக்சல்ஸ், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதுவும் One UI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாகும். ஆனாலும் இந்த போனுக்கு 6 அல்லது 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. ஆகவே இந்த ஸ்மார்ட்போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளியாகும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ போனில் உள்ளன. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo), புளூடூத் 5.4, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
மேலும் 4900எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளன. குறிப்பாக இந்த போன் ரூ.88,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credits: androidheadlines, samsung


Click it and Unblock the Notifications