Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. IP68 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ (Samsung Galaxy S26 FE) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதேபோல் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display)டிஸ்பிளே வசதியும் இதில் உள்ளது. வயலட், பிளாக், கிரே மற்றும் ஒயிட் நிறங்களில் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S26 FE Specifications): சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸ்நோஸ் 2500 எஸ்ஒசி(Exynos 2500 SoC) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.7-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இருக்கும்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 அல்லது 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு கிடைக்கும். IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ சென்சார் உள்ளிட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்

5000mAh பேட்டரி உடன்சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 6.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: Debayan Roy, samsung, phonearena

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 FE design and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X