Home
Mobile

சிதற விடுறான் Samsung.. வரிசை கட்டும் 3 புதிய 5ஜி போன்கள்.. என்னென்ன மாடல்கள்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் - பல வகையான - நெக்ஸ்ட் ஜெனெரஷன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு தயாராகி வருகின்றன. சுவாரசியமாக இந்த பட்டியலில் கடந்த சில நாட்களாக பல வகையான லீக்ஸ்களில் சிக்கி வரும் கேலக்ஸி ஏ37 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ57 5ஜி ஆகிய 2 மாடல்களுமே இல்லை.

வேறு என்ன மாடல்கள்? கேலக்ஸி எஸ்26 எப்இ 5ஜி (Galaxy S26 FE 5G), கேலக்ஸி எம்47 5ஜி (Galaxy M47 5G) மற்றும் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Galaxy F70 Pro 5G) ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஜிஎஸ்எம்ஏ டேட்டாபேஸில் காணப்பட்டுள்ளன. ஆக இந்த மாடல்கள்- சாம்சங் நிறுவனத்தின் ஆடுஅடுத்த அறிமுகங்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளன.

சிதற விடுறான் Samsung.. வரிசை கட்டும் 3 புதிய 5ஜி போன்கள்!

துரதிர்ஷ்டவசமாக ஜிஎஸ்எம்ஏ டேட்டாபேஸில், மேற்குறிப்பிட்ட எந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் மாடல் பெயர்களை வைத்து எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் எந்தெந்தெ சீரீஸின் கீழ் வரும் என்கிற யோசனையை நமக்கு தருகின்றன. அப்படியாக கேலக்ஸி எஸ்26 எப்இ என்பது சாம்சங் நிறுவனத்தின் ஃபேன் எடிஷன் மாடல் ஆகும்.

சாம்சங் தனது வழக்கமான செப்டம்பர் வெளியீட்டுக் காலத்தை கடைப்பிடித்தால், இது 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளிவர வாய்ப்புள்ளது. முந்தைய எப்இ மாடல்களை போலவே, இதுவும்மெயின் கேலக்ஸி எஸ்26 சீரீஸ்-க்கு சற்று கீழே நிலைநிறுத்தப்பட்டு - குறைந்த விலையில் - கேலக்ஸி எஸ்26 மாடலை போன்ற ஒட்டுமொத்த அனுபவத்தை வழங்கும்.

சாம்சங் நிறுவனமானது பொதுவாக அதன் எப்இ மாடல்களில், டிஸ்பிளே மற்றும் கேமராக்களை வலுவாக வைத்திருக்கும் அதே வேளையில், செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க மற்ற சில அம்சங்களில் சமரசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அதையே நாம் அடுத்த எப்இ மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

விலையை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்26 எப்இ மாடல் ஆனது, செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் ஒரு புதிய எக்ஸினோஸ் சிப்புடன் வந்தால், அது ரூ.50,000 - ரூ.60,000 விலைப்பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த விலை, இதே பிரிவில் உள்ள மற்ற நிறுவனங்களின் மாடல்களுக்கு கடும் போட்டியாகவும் இருக்கும்.

முன்னதாக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1,900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ ப்ரொடெக்ஷன்
- விஷன் பூஸ்டர்

- எக்ஸினோஸ் 2400 சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 8
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா
- 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா

- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4,900mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- அளவீட்டில் 7.4 மிமீ தடிமன்
- எடையில் சுமார் 190 கிராம்

ஜிஎஸ்எம்ஏ டேட்டாபேஸில் கேலக்ஸி எஸ்26 எப்இ உடன் சேர்த்து காணப்பட்ட மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி எம்47 5ஜி மற்றும் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டும் சாம்சங்கின் அடுத்த மிட்-ரேன்ஜ் மாடல்களாக இருக்கும். எம் சீரீஸ் ஆனது பொதுவாக பேட்டரி லைஃப்க்கு முக்கியத்துவம் கொடுக்கும். அதே வேளையில், எப் சீரிஸ் ஆனது இளம் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையிலான அம்சங்களில் கவனம் செலுத்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 FE 5G Galaxy M47 5G Galaxy F70 Pro 5G Getting ready to launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X