இதுக்கு தானே தவம் கிடந்தோம்.. 200MP கேமரா.. 4200mAh பேட்டரி.. 16GB ரேம்.. புது SAMSUNG போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எட்ஜ் 26 (Galaxy S26 Edge) ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்கள் கசிந்து, ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ளது. 200 எம்பி கேமரா, 4200mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் போன்ற பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எட்ஜ் 26 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எட்ஜ் 25 (Samsung Galaxy S26 Edge) ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்புக்கு பிறகு கேலக்ஸி எட்ஜ் 26 மாடலுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஏனென்றால், அல்ட்ரா ஸ்லிம் லுக்கில் பிரீமியம் பீச்சர்களுடன் எட்ஜ் மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, பிரீமியம் டிசைனை விரும்பும் கஸ்டமர்களிடையே இது தவிர்க்க முடியாத மாடலாக இருக்கிறது.
இப்போது, இந்த சாம்சங் கேலக்ஸி எட்ஜ் 26 ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்கள் OnLeaks மூலம் கசிந்துள்ளன. இதில் வெறும் 5.5 எம்எம் தடிமன் மட்டுமே இந்த கேலக்ஸி எட்ஜ் 26 கொண்டிருப்பது தெரிகிறது. அதேபோல கேமரா பம்ப் கிளாசிக் லுக் கொடுக்கிறது. அதாவது, கேமரா ஐலேண்ட் பெரிதாக இருக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) இருக்கிறது.
இருப்பினும், கேமரா பம்பைவிட கூடுதலாக ஐலேண்ட் இருக்கிறது. அதேபோல கேமரா பம்ப்பை கணக்கில் எடுத்தால், 10.8 எம்எம் தடிமன் வருகிறது. முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி எட்ஜ் 25 ஸ்மார்ட்போனில் 5.8 எம்எம் தடிமன் கிடைத்தது. ஆனால், இதில் அதைவிட கம்மியாக 5.5 தடிமன் கிடைக்க இருக்கிறது. என்னென்ன பீச்சர்களை இதில் எதிர்பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் அம்சங்கள் (Samsung Galaxy S26 Edge Specifications): இந்த பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.
4200mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இதற்கு கியூஐ2 சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இது இருக்கப் போகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் வர இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட் கிடைக்க இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. மற்ற பீச்சர்கள் கசியவில்லை.
முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி எட்ஜ் 25 ஸ்மராட்போனை பார்க்கையில், 200 எம்பி கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைத்தது. கியூஎச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது.
3900mAh பேட்டரி மட்டுமே இதில் கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங், கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 5.8 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,00,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, எட்ஜ் 26 மாடலும் ரூ.1 லட்சத்துக்கு மேல் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








