Home
Mobile

OnePlus அப்படி போ.. iQOO இப்படி போ.. Samsung-ன் 2 புது சிங்கக்குட்டிகள் வருது.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் 15, ஐக்யூ 15, ரியல்மி ஜிடி 8 ப்ரோ, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ என எந்த பிளாக்ஷிப் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மீதும் உங்களுக்கு ஆர்வம் வரவில்லை என்றால்.. சாம்சங்கின் இந்த 2 புதிய ஸ்மார்ட்போன்களில் ஒன்று - உங்களுடைய ஆர்வத்தை தூண்டலாம்.

அது சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இது அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய 2 மாடல்களின் கேமரா மற்றும் பேட்டரி குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

Samsung-ன் 2 புது சிங்கக்குட்டிகள் வருது.. என்ன மாடல்?

ஸ்மார்ட்ப்ரைஸ்-ன் (SmartPrix) சமீபத்திய அறிக்கையின்படி கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய 2 மாடல்களுமே 50 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்உடன் வரலாம். அதாவது இதில் ஒரு புதிய 50-மெகாபிக்சல் சாம்சங் ISOCELL S5KGNG பிரைமரி சென்சார் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 சீரிஸில் ஒரு புதிய 50-மெகாபிக்சல் சாம்சங் ISOCELL S5KJN3 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா சென்சாரை பயன்படுத்துவதாக பேச்சுக்கள் அடிபட்டன. இருப்பினும் கேலக்ஸி எஸ்26 சீரிஸில் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் மாடல் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து சாம்சங் அதன் உத்தியை சரிசெய்துள்ளதாக ஸ்மார்ட்ப்ரைஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் விளைவாக, முன்பு பயன்படுத்தப்பட்ட அதே 12-மெகாபிக்சல் சோனி IMX564 சென்சாரே எஸ்26 சீரீஸில் பயன்படுத்தும்.

ஸ்மார்ட்ப்ரைஸ் அறிக்கையின்படி, கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களில் புதிய டெலிஃபோட்டோ கேமரா பயன்படுத்தப்படும். அது 12-மெகாபிக்சல் சாம்சங் ISOCELL S5K3LD சென்சார் ஆக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இது கேலக்ஸி எஸ்25 மற்றும் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடல்களில் நாம் பார்த்த 10-மெகாபிக்சல் ISOCELL S5K3K1 யூனிட்டை ரீப்ளேஸ் செய்கிறது.

சாம்சங்கின் இந்த புதிய சென்சார் அதன் உயர் தெளிவுத்திறன் காரணமாக மேம்பட்ட பட தரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேலக்சி எஸ்26 சீரீஸ் ஆனது சாம்சங்கின் மேம்பட்ட தொழில்முறை வீடியோ (APV) கோடெக்குடன் வரும் என்றும், செல்பீ மற்றும் ரியர் கேமராக்களில் 4K 60fps வரை வீடியோ பதிவை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது 4300mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது, இது சாம்சங் கேலக்ஸி எஸ்25 மாடலில் உள்ள 4,000mAh செல்லை விட சற்று பெரியதாகும். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல் 4,900mAh பேட்டரியுடன் அறிமுகமாகலாம்.

மேற்கண்ட தகவல்களை எல்லாம் பார்க்கும் போது, சில மாதங்களுக்கு முன்னர் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமரா குறித்து வெளியான அறிக்கைகள் தவறாகும் என்றே தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சாம்மொபைல் வழியாக கிடைத்த கேலக்ஸி கிளப் அறிக்கையானது, கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா தான் பேக் செய்யப்படும் என்று கூறி இருந்தது

நினைவூட்டும் வண்ணம் இதே கேமரா தான் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மற்றும் எஸ்25 அல்ட்ரா இரண்டிலும் காணப்படுகிறது. இது சிலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களுக்கே இவ்வளவு கேமரா அப்கிரேட் செய்கிறது என்றால் அல்ட்ரா மாடலுக்கு நிச்சயம் நல்ல மேம்பாடுகளை திட்டமிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 and Galaxy S26 Plus Camera and Battery Details Leaked What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X