Home
Mobile

SALE பிச்சிக்குது.. ரூ.7000 டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படி ரூ.7,000 டிஸ்கவுண்ட்டில் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், ஓஐஎஸ் கேமரா, ஆப்டிகல் ஜூமிங் டெலிபோட்டோ கேமரா, IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், 4000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் மாடலாக களமிறங்கிய இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 போனின் விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் கிடைக்கும் டாப்-எண்ட் மாடல்களில் இந்த போன் முக்கியமானது. ஏனென்றால், சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) மட்டுமல்லாமல், ஜெமினி அசிஸ்டன்ட் (Gemini Assistant), கால் டிரான்ஸ்கிரிப்ட் (Call Transcript), ரைட்டிங் அசிஸ்ட் (Writing Assist), டிராயிங் அசிஸ்ட் (Drawing Assist) போன்ற ஒட்டுமொத்த ஏஐ பீச்சர்களுடன் ஒன் யுஐ 7 (One UI 7) கொண்டிருக்கிறது.

SALE பிச்சிக்குது.. ரூ.7000 டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா!

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அம்சங்கள் (Samsung Galaxy S25 Specifications): இந்த சாம்சங் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.2 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் 3என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 போனில் 50 எம்பி கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமரா மற்றும் டெலிபோட்டோ கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது.

8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) சப்போர்ட் உள்ளது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைப்பதால், அண்டர் வாட்டர் போட்டோகிராபி எதிர்பார்க்கலாம். வெறும் 7.2 எம்எம் தடிமன் மற்றும் 162 கிராம் எடையில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 போனில் 4000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging) கிடைக்கிறது. அதேபோல வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) சப்போர்ட் கொடுக்கிறது. ப்ளூ (Blue), சில்வர் ஷேடோ (Silver Shadow), மின்ட் (Mint) மற்றும் நேவி (Navy) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.80,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.7000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.73,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால் ரூ.5000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்களை பெறுவதற்கு எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு வேண்டும். ரூ.73,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 With 50MP Camera Gets Discount in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X