பொசுக்குனு ரூ.10,000 கட்.. புது போன் வந்த நேரம்.. OIS கேமரா.. 4000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடலின் வெளியீட்டை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ரூ.10,000 டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ள முடிகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட இந்த கேலக்ஸி எஸ்25 போனின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை பார்த்துவிட்டு, பீச்சர் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளிப்கார்ட் விற்பனை (Samsung Galaxy S25 Flipkart Sale): இந்திய மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.80,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.92,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.10,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது.

எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதுவே ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.8,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இப்போது ரூ.70,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல ரூ.92,999 விலை கொண்ட 512 ஜிபி வேரியண்ட்டையும் ரூ.10,000 டிஸ்கவுண்ட் போக ரூ.82,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அம்சங்கள் (Samsung Galaxy S25 Specifications): இது லேட்டஸ்ட் மடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. அதேபோல ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite 3nm) மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) உள்ளது.
7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. சர்க்கிள் டூ சர்ச்ச் உள்பட ஜெமினி அசிஸ்டன்ட், ரைட்டிங் அசிஸ்ட், டிராயிங் அசிஸ்ட் மற்றும் கால் டிரான்ஸ்கிரிப்ட் போன்ற கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்களை இந்த போன் கொடுக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) டிஸ்பிளே பாதுகாப்பு உள்ளது.
6.2 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) (AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 4K வீடியோ ஷூட் & ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவுக்கு 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10 எம்பி டெலிபோட்டோ கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. மெயின் கேமராவில் 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 போனில் 12 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ப்ரோவிசுவல் என்ஜின் (ProVisual Engine) சப்போர்ட் கிடைக்கிறது.
இதன் மூலம் நைட்போட்டோகிராபி, போர்ட்ராய்டு, போட்டோ அசிஸ்ட், ஆடியோ எரைஸ் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. வெறும் 7.2 எம்எம் தடிமன் வருவதால், 4000mAh பேட்டரி மட்டுமே கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங், கியூஐ சார்ஜிங், பவர்ஷேரிங் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








