Home
Mobile

இது குதிரைக்கொம்பு.. 16GB ரேம் கிடைக்குறது இங்க மட்டும்தான்.. புது Samsung Galaxy S25 Ultra ஹை-எண்ட் எங்கே?

இந்தியாவில் சாம்சங் பிரியர்கள் காத்திருந்து வாங்க ஆசைப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) வெளியாகி ப்ரீ-ஆர்டருக்கும் வந்துவிட்டது. ஆனால், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட் இங்கு வெளியாகாதது சாம்சங் பிரியர்களுக்கு சற்று கடுப்பாகவே இருக்கிறது. ஆனால், சில ஆசிய மார்கெட்டுகளில் 16 ஜிபி ரேம் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. விலையை கேட்டால், வராமல் இருப்பதே பரவாயில்லை என்று தோன்றும்.

கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் (Samsung Galaxy S25 Series) வெளியாகின. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் இந்திய மார்கெட்டுக்கு வந்தன. ஆனால், 16 ஜிபி ரேம் வேரியண்ட் கிடைக்கவில்லை.

இது குதிரைக்கொம்பு.. 16GB ரேம் கிடைக்குறது இங்க மட்டும்தான்.. எங்கே?

இருப்பினும், ஆசியா நாடுகளான தென் கொரியா (South Korea), சீனா (China) மற்றும் தைவான் (Taiwan) நாடுகளில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகிவிட்டது. இதனால், இந்திய பிரியர்கள் அதை வாங்கலாமா என்று திட்டமிடவே தொடங்கிவிட்டனர். ஆகவே, அந்த நாடுகளில் 16 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை எப்படி என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா விலை (Samsung Galaxy S25 Ultra Price): தென் கொரியாவில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,35,280ஆக இருக்கிறது. சீனா மற்றும் தைவானில் 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டுக்கு பதிலாக இந்த 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. சீனாவில் ரூ.1,62,593 விலைக்கு கிடைக்க இருக்கிறது.

தைவான் நாட்டில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,50,280 ஆக இருக்கிறது. இந்த விலைகள் அந்தந்த நாடுகளின் கரன்சிகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,29,999ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,41,999ஆகவும் இருக்கிறது.

12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1,65,999ஆக இருக்கிறது. ஒருவேளை இந்தியாவில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட் கிடைத்திருந்தால், அதன் விலை கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்தை எட்டி இருக்கும். ஆகவே, அது மிகவும் அதிக விலையாகும். இதனாலேயே இந்திய மார்கெட்டில் அந்த வேரியண்ட் வெளியாகமல் இருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் கார்னிங் கொரில்லா ஆர்மர் பாதுகாப்புடன் 6.9 இன்ச் கியூஎச்டிபிளஸ் டிஸ்பிளே உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ஒன் யுஐ 7 மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா இருக்கிறது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கிடைக்கிறது.

8K வீடியோ ரெக்கார்டிங், 100X ஜூமிங், 5X ஆப்டிகல் ஜூமிங், லேசர் ஆட்டோ போகஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. IP68 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. வழக்கம்போல டைட்டானியம் கலர் வேரியண்ட்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Ultra With 16GB RAM Available in Some Asian Countries Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X