ரூ.11,000 ஆஃபர்.. இதைவிட கம்மி இல்ல.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?
200 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, கொரில்லா ஆர்மர் 2 டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, 45W சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) போனுக்கு ரூ.11,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் லிமிடெட்-ப்ரீயட் ஆஃபராக இருப்பதால் சாம்சங் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த பிரீமியம் சாம்சங் போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு போன்களிலேயே அதிகப்படியான பீச்சர்களை கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா இருக்கிறது. ஆகவே, விலையும் கொஞ்சமல்ல, ரொம்பவே அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த ரூ.11,000 டிஸ்கவுண்ட் கூட அதிகமாகவே தெரிகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,29,999ஆக இருக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் ரூ.11,000 டிஸ்கவுண்ட் போக ரூ.1,18,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. அதுவே டெபிட் கார்டு மூலம் வாங்கினால், ரூ.9000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால் அதே ரூ.9000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.71,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கொடுக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S25 Ultra Specifications): இந்த சாம்சங் போனில் 6.9 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 (Corning Gorilla Armor 2) புரொடெக்சன், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கிஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போனில் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி வை-ஆங்கிள் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. வைடு ஆங்கிள் கேமராவில் 2X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது.
பெரிஸ்கோப் டெலிபோட்டோவில் 5X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming), 10X ஆப்டிகல் குவாலிட்டி ஜூமிங் (Optical Quality Zooming) மற்றும் 100X ஸ்பேஸ் ஜூமிங் (Space Zooming) கிடைக்கிறது. இதுபோக 10 எம்பி டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் கேமரா அவுட்புட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் போன் இருக்கிறது.
மேலும், நைட்போட்டோகிராபி, போர்ட்ராய்டு மற்றும் ஃபில்டர்களுக்காக பிரத்யேக ப்ரோவிசுவல்என்ஜின் (ProVisualEngine) கிடைக்கிறது. பர்சோனல் டேட்டா என்ஜின் மற்றும் கேலக்ஸி ஏஐ பீச்சர்களை கொடுக்கும்படி ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. 7 ஜெனரேஷன் ஓஎஸ் மற்றும் 7 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் 3என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (3nm Octa Core Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. IP68 ரெசிஸ்டன்ட், 12 எம்பி செல்பீ ஷூட்டர், 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








