Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.12,000 ரேட் கட்ல 200MP கேமரா.. QHD+ டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) போன் கிடைக்கிறது. நேரடியாக ரூ.12,000 விலை
குறைப்பில் கிடைப்பதால், விற்பனை சக்கைப்போடு போட்டு வருகிறது. இதுவொரு லிமிடெட் பிரீயர் ஆஃபராக இருப்பதால், ஜூன் 14ஆம் தேதி வரையில் வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதற்காக கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்ய வேண்டுமென்று கட்டாயம் கிடையாது. இதுகுறித்த விவரம் இதோ.

அமேசான் (Amazon) மற்றும் சாம்சங் (Samsung) தளங்களில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த லிமிடெட் பிரீயட் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இப்போது, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,17,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,29,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.1,53,999ஆகவும் இருக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.12,000 ரேட் கட்ல 200MP கேமரா.. எந்த மாடல்?

இது ரூ.12,000 விலை குறைப்பில் கிடைப்பதாகும். மார்கெட் விலையை பார்க்கையில், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,29,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,41,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.1,65,999ஆக இருக்கிறது. இதுபோக சாம்சங் தளத்தில் 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது.

ரூ.3,278 முதல் மாதாந்திர தவணையில் வாங்கி கொள்ளலாம். எச்டிஎப்சி பேங்க், பஜாஜ் பின்சர்வ், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க், சாம்சங் பைனான்ஸ் போன்ற கார்டுகளுக்கு கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு மற்றும் சலுகைகளானது, வரும் ஜூன் 14ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். அதற்கு பிறகு மார்கெட் விலை அல்லது மற்றொரு சலுகை விலையுடன் கிடைக்கலாம்.

அமேசான் தளத்தில் ரூ.73,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெறலாம். அதேபோல அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக ரூ.3,539 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ள முடியும். டைட்டானியம் சில்வர்ப்ளூ, டைட்டானியம் கிரே, டைட்டானியம் பிளாக், டைட்டானியம் ஒயிட்சில்வர் கலர்கள் இருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S25 Ultra Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் பெற்று கொள்ளலாம். ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core 3nm Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது.

கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 (Corning Gorilla Armor 2) புரொடெக்சன் கொண்ட 6.9 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ-எட்ஜ் டைனாமிக் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ப்ரோவிசுவல் என்ஜின் உள்ளது.

200 எம்பி வைடு-ஆங்கிள் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட குவாட் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி கிடைக்கிறது. IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. பிரீமியம் பிரியர்களுக்கு ஏற்ற மடாலாகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Ultra With 12GB RAM Gets Rs 12000 Price Drop in Amazon Check Limited-time Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X