அடுத்த மாதம் உறுதி.. 200MP கேமரா.. 16ஜிபி ரேம்.. 45W சார்ஜிங்.. வருகிறது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் உடன் வெளிவரும். இந்நிலையில் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போனின் நிறங்கள் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் ப்ளூ, டைட்டானியம் கிரே, டைட்டானியம் ஒயிட் சில்வர், டைட்டானியம் ஜெட் பிளாக் டைட்டானியம் ஜேட்கிரீன், டைட்டானியம் பிங்க் கோல்டு ஆகிய நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S25 Ultra Specifications): 6.86-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 200எம்பி பிரைமரி கேமரா + 10எம்பி 3X டெலி போட்டோ கேமரா + 50எம்பி 5X டெலி போட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். தரமான கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனின் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த சாம்சங் போன் வெளிவரும்.
5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனுக்கு 25W சார்ஜிங் வழங்கப்படாமல் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு இந்த சாம்சங் போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








