வாங்குனா இந்த Samsung போன் வாங்கனும்.. 200எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ஜனவரி 22-ம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S25 Ultra Specifications): 6.86-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

200எம்பி பிரைமரி கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி 5எக்ஸ் (5X) டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset)உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த
போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) அம்சங்கள் இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போன் அறிமுகமாகும். பின்பு டூயல் சிம், 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போனில் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு சாம்சங் நிறுவனம் இந்தியாவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








