Home
Mobile

Samsung சித்தப்பு அசத்துறீயே.. புதுசா Slim போன் வருதுனு 2 பழைய மாடல்கள் மீது பலே டிஸ்கவுண்ட்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போன் 2025 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சாம்சங்கின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மற்றும் சற்றே பழைய மாடல் ஆன கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஆகிய இரண்டும் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன

2024 ஆம் ஆண்டு ரூ.1,29,999க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, இப்போது அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இதேபோல இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.1,29,999 க்கு அறிமுகமான கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

புது Slim போன் வருதுனு 2 Samsung மாடல்கள் மீது பலே டிஸ்கவுண்ட்!

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஆப்ஷன் இப்போது அமேசானில் (Amazon) வெறும் ரூ.96,990 க்கு வாங்க கிடைக்கிறது. குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோருக்கு இந்த தள்ளுபடி குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்குகிறது. மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு (HDFC Credit Card) தள்ளுபடி கிடைக்கிறது. இதன்கீழ் ரூ.11,000 உடனடி தள்ளுபடியை பெற்று எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையை ரூ.1,18,999 ஆக குறைக்கலாம்

இந்த சலுகை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) இரண்டிலும் கிடைக்கிறது. கூடுதலாக இந்த 2 தளங்களிலும், , கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகிய இரண்டுஸ்மார்ட்போன்கள் மீதும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும் (Exchange Offer) கிடைக்கின்றன. இதன்கீழ் பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை டிரேட் செய்வதன் மூலம் தாங்கள் வாங்கும் ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Samsung Galaxy S25 Edge Specifications Expected)? எதிர்பார்க்கப்படும் ஏப்ரல் 2025 அறிமுகத்திற்கு முன்னதாக, ஒரு நம்பகமான டிப்ஸ்டர் (சீன மைக்ரோபிளாக்கிங் தளமான வெய்போ வழியாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ்) வழியாக ​​சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் பில்ட் மெட்டீரியல் மற்றும் டிஸ்பிளே பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ் யுனிவர்ஸ்-ன் கூற்றுப்படி சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் அலாய் மிடில் ஃபிரேமை (Titanium alloy middle frame) கொண்டிருக்கும். அதாவது இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடலை போலவே இருக்கும் என்று அர்த்தம்.

இது உண்மையாகும் பட்சத்தில், எட்ஜ் மாடல் ஆனது கேலக்ஸி எஸ் சீரீஸில் டைட்டானியம் பாடியை கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் ஐசிப்ளூ, டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்பிளாக் ஆகிய 3 கலர்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் வரும் என்றும் டிப்ஸ்டர் வெளிப்படுத்துகிறார். இது சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் காணப்படும் 3120 x 1440 பிக்சல்களை போலவே இருக்கும் என்றும், எஸ்25 மாடலில் உள்ள எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷனை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (Samsung Galaxy S25 Edge Price Expected)? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,13,660 முதல் ரூ.1,23,132 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,23,132 முதல் ரூ.1,32,603 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Ultra S24 Ultra Gets Discounts Ahead S25 Edge Launch in April 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X