முழுசா ரூ.10000 விலை குறைப்பு.. 5000mAh பேட்டரி, 12GB ரேம், 200MP கேமரா.. Samsung-ன் 5ஜி போன்.. எந்த மாடல்?
பெரும்பாலான பிராண்டுகள் யாருக்கும் தெரியாமல் தத்தம் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி வரும் வேளையில், சாம்சங் (Samsung) நிறுவனமானது தனது புதிய கேலக்ஸி எஸ்26 சீரீஸின் (Galaxy S26 Series) அறிமுகத்தை தொடர்ந்து கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) மாடலின் விலையை குறைத்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் விலையைத் திருத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த திருத்தப்பட்ட விலை கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சாம்சங் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

எக்ஸ் (X) போஸ்ட் ஒன்றில், டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி, சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவின் புதுப்பிக்கப்பட்ட விலையை விவரிக்கும் ஒரு ரீடெய்லர் கம்யூனிகேஷன் அவுட்லைனிங்கை (Retailer communication outlining) போல தோன்றும் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிட்ட விலை மாற்றம் மார்ச் 20, 2026 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,29,999 இல் இருந்து குறைந்து, ரூ.1,19,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் 12ஜிபி ரேம் + 512ஜிபி மாடலின் விலை ரூ.1,39,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது அதன் அறிமுக விலையான ரூ.1,41,999 இல் இருந்து ஒரு சிறிய விலை குறைப்பை காட்டுகிறது.
எக்ஸ் தளத்தில் வெளியான ஆவணமானது, சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலுக்கான விலை மாற்றத்தையும் குறிப்பிடுகிறது, ஆனால் புதுப்பிக்கப்பட்ட விலையானது ரூ.4,000 அதிகரித்து, ரூ.1,65,999 இல் இருந்து ரூ.1,69,999 ஆக உயர்ந்துள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் நிறுவனம் இதுகுறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி மாடல்களுக்கான புதுப்பிக்கப்பட்ட விலைகள் சாம்சங் இந்தியாவின் இணையதளத்தில் பிரதிபலிக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: பெரிய 6.9 இன்ச் டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், டைட்டானியம் பில்ட் மற்றும் கார்னிங்கின் கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்பு, 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதன் 'கேலக்ஸி ஃபாரெவர்' திட்டத்தை அறிமுகப்படுத்திய வேகத்தில் இந்த விலை மாற்றங்கள் வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இத்திட்டத்தின் கீழ் வாங்க கிடைக்கும். இதன்கீழ் "முதலில்" பாதி விலையை மட்டுமே செலுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போனை சொந்தமாக்கி கொள்ளலாம்; அதை வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.
கேலக்ஸி ஃபாரெவர் திட்டத்தின் அடிப்படை கருத்து மிகவும் எளிமையானது. ஸ்மார்ட்போனின் விலையில் 50 சதவீதத்தை, வட்டியில்லா 12 மாத தவணைகளில் நீங்கள் செலுத்துவீர்கள். ஒரு வருடத்திற்கு பிறகு, நீங்கள் அந்த ஸ்மார்ட்போனைத் திருப்பி கொடுக்கலாம், அல்லது அதை நீங்களே வைத்துக்கொள்ளலாம் அல்லது அடுத்த கேலக்ஸி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
சாம்சங் கேர் பிளஸ் திட்டத்தின் கீழ், எந்த கேள்வியும் கேட்காத கொள்கையின் மூலம் சாம்சங் இதை ஆதரிப்பதால், ஸ்மார்ட்போனை திருப்பக் கொடுப்பதில் சிக்கலான ஆவணப்பணிகள் எதுவும் இருக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தகக்து. கேலக்ஸி ஃபாரெவர் திட்டமானது சாம்சங்.காம் தளத்திலும், இந்தியா முழுவதும் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களிலும் அணுக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








