வா ராசா.. 16GB ரேம், 1TB மெமரி, ஸ்னாப்டிராகன் 8 எலைட்.. இப்படி ஒரு Samsung போனுக்கு தானே வெயிட்டிங்!
ஒருவழியாக 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் மாடல் ஆன ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி விட்டது. அடுத்தது என்ன என்கிற கேள்விக்கு இடம் கொடுக்க விரும்பாத சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ் சீரீஸை உடனே அறிமுகம் செய்யவுள்ளது.
கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஆனது ஜனவரி 22 ஆம் தேதி நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு 2025 (Galaxy Unpacked 2025) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த சீரீஸின்கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்25, சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அல்லது கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் உடன் சேர்த்து 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் அதுதான் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வின் முக்கிய ஹைலைட் ஆக இருக்கும். ஒருவேளை ஸ்லிம் மாடல் வெளியாகவிட்டால்.. கடந்த ஆண்டுகளை போலவே. இந்த 2025 ஆம் ஆண்டும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடல் தான் ஹீரோவாக இருக்கும்!
இது ஆப்பிளின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஒன்பிளஸ் 13 ஆகிய பல ஸ்மார்ட்போன்களுக்கான நேரடி போட்டியாளராக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த ஸ்மார்ட்போனின் முறையான வெளிப்பாட்டிற்காக நாமெல்லாம் காத்திருக்கும் நேரத்தில், நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவர், கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலின் முக்கிய அம்சங்களை பரிந்துரைத்துள்ளார்.
வின்ஃபியூச்சரின் ரோலண்ட் குவாண்ட் (WinFuture's Roland Quandt / @rquandt.bsky.social) வழியாக கிடைத்த தகவல்களின்படி, கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2600நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் ஆதரவு உடனான டைனமிக் எல்டிபிஓ அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 12ஜிபி ரேம் + 256ஜிபி, 16ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி ஆகிய மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்று கூறப்படுகிறது. முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட் உடன் ஒப்பிடும் போது, கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.
அளவீடுகளை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 162.8×77.6×8.2மிமீ இருக்கும் மற்றும் எடையில் 219 கிராம் இருக்கும். இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவை விட மிகவும் எடை குறைவானதாக இருக்கும். ஏனென்றால் கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலின் எடை 232 கிராம் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? சாம்சங் நியூஸ்ரூமின்படி, சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வானது ஜனவரி 22 ஆம் தேதி நடக்கும். இது இந்திய நேரடி இரவு 10:30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும். மேலும் சாம்சங்.காம் (Samsung.com), சாம்சங் நியூஸ்ரூம் (Samsung Newsroom) மற்றும் சாம்சங்கின்அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அன்பேக்டு 2025 நிகழ்வில் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் தவிர்த்து வேறு என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்? சாம்சங் நிறுவனம் அதன் ப்ராஜக்ட் மூஹன் (Project Moohan) என அழைக்கப்படும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (Extended reality - XR) ஹெட்செட்டை அறிமுகப்படுத்தலாம். இது கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் இயங்குதளத்தின் (Google new Android XR platform) கீழ் இயங்குகிறது. இதோடு கேலக்ஸி ரிங் 2 (Galaxy Ring 2) ஸ்மார்ட் ரிங்கும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








