100x ஸ்பேஸ் ஜூம், 200MP கேமரா, 16GB ரேம்.. இப்படி ஒரு Samsung போனுக்கு தான் அம்புட்டு பேரும் வெயிட்டிங்!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் ஏ-சீரிஸ் அல்லது எம்-சீரீஸின் கீழ் அடுத்த என்ன மாடல் அறிமுகமாகும் என்று கேட்டால்.. உங்களில் பலரும் வெவ்வேறு வகையான பதில்களை கூறலாம். அதுவே சாம்சங்கின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எதுவென்று கேட்டால்.. எந்த மாடல் ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு போட்டியாக இருக்க போகிறது என்று கேட்டால்.. ஒரே ஒரு பதில் தான் வரும்; அது - சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) என்பதே ஆகும்.
அப்படியான சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? இதன் டிசைன் மற்றும் டிஸ்பிளே எப்படி இருக்கும்? இது என்னென்ன கேமரா சென்சார்களை பேக் செய்யும்? இதன் ரேம், இன்டர்னல் ஸ்டோரேஜ், பேட்டரி கெப்பாசிட்டி எப்படி இருக்கும்? இது இந்திய சந்தையில் என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் டிசைன் மற்றும் டிஸ்பிளே: எஸ்25 அல்ட்ரா மாடலானது ஒப்பீட்டளவில் சற்று மெலிதான பாடி, கூர்மையான மூலைகள் மற்றும் மெல்லிய பெசல்களுடன் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எஸ்24 அல்ட்ராவில் உள்ளதை போலவே, இதுவும் டைட்டானியம் ஃபிரேம் மற்றும் 6.9-இன்ச் டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளே (120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரெட்) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் கேமரா: இது சிறந்த லோ லைட் செயல்திறன் மற்றும் விரிவான பதிவுக்காக மேம்படுத்தப்பட்ட ஏஐ செயலாக்கத்துடனான கேமரா செட்டப்பை பெறும். இது 200எம்பி ப்ரைமரி சென்சாரை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது சிறந்த போர்ட்ரெயிட்கள் மற்றும் ஏஐ-எனேபிள்டு நைட் மோட் ஆகியவைகளையும் வழங்கலாம்.
மற்ற கேமராக்களை பொறுத்தவரை இதில் 12எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் இரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ்கள் இடம்பெறலாம். அதில் ஒன்று 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமையும், மற்றொன்று 10எக்ஸ் ஆப்டிகல் ஜூமையும் ஆதரிக்கலாம். மேலும் இதன் கேமரா செட்டப்பில் ஷார்ப் ஆன, நிலையான ஜூம்-இன் புகைப்படங்களை வழங்கும் 100எக்ஸ் ஸ்பேஸ் ஜூம் தொழில்நுட்பமும் சேர்க்கப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் சிப்செட், ரேம், ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி: இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற பகுதிகளில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 (Qualcomm Snapdragon 8 Gen 4) சிப்செட் மூலம் இயக்கப்படும் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில் ஐரோப்பாவில் இது எக்ஸிநோஸ் 2500 ( Exynos 2500) சிப்செட்டை பெறலாம்.
இவ்விரு சிப்செட்களுமே அதிக செயல்திறன், அதிக ஆற்றல் மற்றும் மேம்படுத்தப்பட்ட 5ஜி கனெக்டிவிட்டி ஆகியவற்றை வழங்குகின்றன. இதனுடன் 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி முதல் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் சேர்க்கப்படலாம். கடைசியாக இது 65W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் வெளியீட்டு தேதி மற்றும் இந்திய விலை நிர்ணயம்: இந்த ஸ்மார்ட்போன், பிப்ரவரி 2025 இல் நடக்கவுள்ள சாம்சங் நிறுவனத்தின் வருடாந்திர அன்பேக்டு நிகழ்வில் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து மார்ச் 2025 க்குள் இந்தியாவில் விற்பனைக்கும் வரும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.1,20,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
மேற்கண்ட விலை நிர்ணயமானது இதுவரை எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை பற்றி கிடைத்த லீக்ஸ், மற்றும் இதில் சேர்க்கப்படலாம் பிரீமியம் அம்சங்கள் ஆகியவைகளை அடிப்படையாக கொண்ட விலையே ஆகும். எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் மேலும் சில மேம்பட்ட அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்படும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








