Home
Mobile

புது Samsung Galaxy S25 Edge மீது ரூ.12,000 டிஸ்கவுண்ட்.. உடனே Galaxy S25 Ultra மீது ரூ.11,000 டிஸ்கவுண்ட்!

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடலின் இந்திய விலை நிர்ணயமும், ப்ரீ-ஆர்டர் சலுகையும் அறிவிக்கப்பட்ட வேகத்தில், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடல் மீதும் திடீர் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் சீரிஸின் கீழ் அறிமுகமான நான்காவது ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் - சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு சற்று கீழே வைக்கப்பட்டு உள்ளது.

புது Samsung Galaxy S25 Edge மீது ரூ.12,000 டிஸ்கவுண்ட்!

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் ரூ.1,09,999 என்றும், 12GB + 512GB ஆப்ஷன் ரூ.1,21,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ரீ-ஆர்டர் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 512GB மாறுபாட்டை 256GB விருப்பத்தின் விலையில் பெறலாம். அதாவது ரூ.12,000 தள்ளுபடியை பெறலாம்.

இதற்கிடையில் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை ரூ.1,29,999 க்கு பதிலாக ரூ.11, 000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.1,18,999 க்கு விற்பனை செய்து வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அமேசான் லிஸ்டிங்கின் படி இந்த விலை பேங்க் ஆபரை உள்ளடக்கிய விலை ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge Full Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது QHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் AMOLED பேனலை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிப் ஆகும். ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் (மேக்ரோ மோட் உடன்) உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொருத்தவ்ரு இது 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.

சாஃப்ட்வேர்-ஐ பொறுத்தவரை இந்த போன் கேலக்ஸி ஏஐ அம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Samsung Galaxy S25 Ultra Specifications): பெரிய 6.9 இன்ச் டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், டைட்டானியம் பில்ட் மற்றும் கார்னிங்கின் கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்பு, 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Ultra Gets Price Cut in Amazon After Galaxy S25 Edge Pre Order Offer Announcement
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X