Home
Mobile

Apple, Xiaomi-ஐ ஓவர்டேக்.. Samsung Galaxy S25 Ultra-வில் இப்படி ஒரு ஸ்பெஷல்-ஆ.. எப்போது அறிமுகம்? என்ன விலை?

2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் சீரீஸ் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் (Samsung Galaxy S25 Series) ஆனது (வருகிற ஜனவரி மாதத்தில்) எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி லீக் ஆன வேகத்தில், கேலக்ஸி எஸ்25 சீரீஸின் ஹை-எண்ட் மாடலான கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா தொடர்பான சில அட்டகாசமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பகமான டிப்ஸ்டர் ஒருவரின் வழியாக கிடைத்துள்ள தகவல்கள் ஆனது கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவானது எவ்வளவு ஸ்லிம் ஆன வடிவமைப்பை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. கூடவே கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்னென்ன கலர்களில் அறிமுகமாகும் என்கிற முழு பட்டியலும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இது மொத்தம் 7 கலர் ஆப்ஷன்களில் வரும் என்றும், அதில் 3 கலர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே வாங்க கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Samsung Galaxy S25 Ultra-வில் இப்படி ஒரு ஸ்பெஷல்-ஆ.. எப்போது அறிமுகம்?

டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (Ice Universe) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் குறுகிய பெசல்களை கொண்டிருக்கும். இது ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மற்றும் சியோமி 15 போன்ற போட்டியாளர்களில் இருக்கும் பெசல்களை விட மிகவும் ஸ்லிம் ஆன பெசல்களை கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை,இது ப்ளூ கலரில்.. அதாவது லைட் ப்ளூ பேக் கவர் மற்றும் சில்வர் மிடில் ஃபிரேம் உடன் வரலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல பிளாக் கலர் சில்வர் மிடில் ஃபிரேம் கொண்ட கலர் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒயிட், கிரே கலர்களிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

இது முந்தைய அறிக்கையுடன் கிட்டத்தட்ட ஒற்றுப்போகிறது. முன்னதாக கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் ப்ளூ, டைட்டானியம் க்ரே மற்றும் டைட்டானியம் ஒயிட் சில்வர் ஆகிய கலர்களில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. மற்ற 3 நிறங்களான டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஜெட் க்ரீன் மற்றும் டைட்டானியம் பிங்க் கோல்ட் ஆகியவைகள் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே பிரத்தியேகமாக வாங்க கிடைக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு எப்போது நடக்கும்? எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் ஆல்வின் (@sondesix) பகிர்ந்துள்ள தகவலின்படி சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வானது ஜனவரி 22 ஆம் தேதி நடக்கலாம். இந்நிகழ்வு குறிப்பிட்ட தேதியில் இந்திய நேரடி இரவு 11:30 மணிக்கு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் ஆல்வினின் இந்த லீக் ஆனது கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வின் "பரிந்துரைக்கப்பட்ட டைம்லைன்" ஆன ஜனவரி 23 உடன் தோராயமாக ஒற்றுப்போகிறது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி தான் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது ஆக எப்படி பார்த்தாலும்.. கொஞ்சம் முன்பும் பின்பும் இருந்தாலும் கூட.. எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் நிச்சயம் ஜனவரி 2025 இல் அறிமுகமாகி விடும்.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்? சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸின் கீழ் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். கூடவே ப்ராஜெக்ட் மூஹன் என்று அழைக்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் எக்ஸ்ஆர் ஹெட்செட்டும் கூட காட்சிப்படுத்தப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்25 இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.67,000 க்கும், சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் தோராயமாக ரூ.84,000 க்கும் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா தோராயமாக ரூ.1,10,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதோடு சேர்த்து வேறு என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்? என்னென்ன புதிய அறிவிப்புகள் நடக்கும் என்பது குறித்த தகவல் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Ultra Design Colourways Launch Timeline Price in India all You need to know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X