SAMSUNG போட்ட போடு.. ரூ.18,000 விலை குறைப்பு.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஸ்மார்ட்போனுக்கு இதுவரையில் கிடைக்காத விலை குறைப்பு வந்துள்ளது. உங்களிடம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இல்லாமலேயே அதிகபட்ச விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். 200 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் பீச்சர்களை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்35 அல்ட்ரா போன் கொடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்35 அல்ட்ரா களமிறங்கிய போது, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,29,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் நேரடியாக ரூ.18,000 விலை குறைப்பு போக ரூ.1,11,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த விலை குறைப்புக்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் தேவையில்லை.

இதுபோக ரூ.52,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு இருந்தால் கூடுதலாக டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.18,000 விலை குறைப்பில் கிடைப்பதால், விற்பனை சக்கைப்போடு போடுகிறது. ஏனென்றால், இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S25 Ultra Specifications): 6.9 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் குவாட் எச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதற்கு கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 (Corning Gorilla Armor 2) கிடைக்கிறது.
ஆகவே, அல்ட்ரா பிரீமியம் கேமிங் மற்றும் ஓடிடி அனுபவத்தை பெறலாம். 6.9 இன்ச் டிஸ்பிளே ஆனது பெரியது என்பதால், மினி டேப்லெட் போல இதை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போனில் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core 3nm Qualcomm Snapdragon 8 Elite) வருகிறது.

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் பிரீமியம் ஏஐ பீச்சர்களை கொடுக்கும் ஒன் யுஐ 7 (One UI 7) பேக் செய்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமல்லாமல், 7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கொடுக்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் உள்ளது.
ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 3X ஆப்டிகல் ஜூமிங் கொண்ட 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 5X ஆப்டிகல் ஜூமிங் கொண்ட 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா கிடைக்கிறது. இதுபோக 100X ஸ்பேஸ் ஜூம், 8K வீடியோ ஷூட் இந்த கேமராவில் கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போனில் 12 எம்பி செல்பீ கேமரா மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மிட்-பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








