Home
Mobile

அசூர விற்பனை.. ரூ.10,000 ஆஃபரில் 200MP கேமரா Samsung ஸ்மார்ட்போன்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) சாம்சங் ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடலுக்கு பேங்க் கார்டுகள் இல்லாமலேயே ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட், நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகள் உள்ளன.

இப்போது, அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.94,999ஆக இருக்கிறது. இதில் இருந்து ரூ.10,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, நேரடியாக ரூ.84,999 விலைக்கு வாங்கலாம். இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,549 தள்ளுபடி மற்றும் 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அசூர விற்பனை.. ரூ.10,000 ஆஃபரில் 200MP கேமரா Samsung ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S25 Ultra Specifications): 6.9 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா கொண்டுள்ளது. மேலும், குவாட் எச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 (Corning Gorilla Armor 2) புரொடெக்சனும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமராவுடன் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 3X ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 5X ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா ஆகியவை உள்ளன. மேலும், 100X ஸ்பேஸ் ஜூம் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.

பர்ஃபாமென்ஸை பொறுத்தவரையில், இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core 3nm Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹை-எண்ட் கேமிங், மல்டி டாஸ்கிங் மற்றும் கிராபிக்ஸ் சார்ந்த யூசேஜ்களில் பிரீமியம் அனுபவம் கிடைக்கும்.

சாஃப்ட்வேர் வசதிகளுக்கு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஒன் யுஐ 7 (One UI 7) வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரீமியம் ஏஐ (AI) பீச்சர்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைப்பதால், நீண்ட காலத்திற்கு லேட்டஸ்ட் அம்சங்களை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வழியாக பெற்று கொள்ள முடியும்.

பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதிகளை பொறுத்தவரையில், 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை விரைவாக சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மேலும், கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging) வசதியும் இடம்பெற்றுள்ளது. இதனால் வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் என இரண்டு ஆப்ஷன்களையும் பயன்படுத்தலாம்.

பெரிய டிஸ்பிளே விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த போன் சிறந்த ஆப்ஷனாக இருக்கும். குறிப்பாக, 6.9 இன்ச் ஸ்கிரீன் இருப்பதால் வீடியோ ஸ்ட்ரீமிங், ஓடிடி கன்டென்ட் பார்ப்பது மற்றும் கேமிங் போன்றவற்றுக்கு ஏற்றதாக உள்ளது. மேலும், இதில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

செல்பீ மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்கு 12 எம்பி முன்பக்க கேமரா மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியும் உள்ளது. இதனால் தூசி மற்றும் தண்ணீரிலிருந்து போனுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. பிரீமியம் மாடலை கிரெடிட் கார்டுகள் இல்லாமலேயே தள்ளுபடியில் வாங்க இது நல்ல வாய்ப்பாகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Ultra 5G With 200MP Camera Gets Discount on Amazon Great Indian Festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X