அமேசான் அள்ளி கொடுக்குது.. ரூ.45000 டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா, 5000mAh பேட்டரி Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி முதல் ப்ரைம் டே சேல் தொடங்க உள்ளது. ஜூலை 6 ஆம் தேதி வரை நடக்கும் இந்த சிறப்பு விற்பனையில் பல வகையான ஸ்மார்ட்போன்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கவுள்ளது.
அந்த டீல்களுக்கு எல்லாம் சிம்மசொப்பனம் ஆக சாம்சங் நிறுவனத்தின் 2025 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.45000 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S25 Ultra 5G) ஸ்மார்ட்போன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஜனவரி 2025 இல் இந்தியாவில் அறிமுகமானது.

அறிமுகமான நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,29,999 க்கு வாங்க கிடைத்தது. ஆனால் அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது இது ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.45,000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கும். இது நேரடி தள்ளுபடி + வங்கி தள்ளுபடி ஆகாய இரண்டையும் கலந்த விலையாக இருக்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.9-இன்ச் (1400 x 3120 பிக்சல்ஸ்) டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளே
- 1Hz-120Hz வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்
- 2,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி வரையிலான ரேம் - 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்
- குவாட் ரியர் கேமரா செட்டப்
- 2எக்ஸ் இன்-சென்சார் ஜூம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS கொண்ட 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரி
அதே ஜூலை 4-ல் பிளிப்கார்ட் கோட் சேல் (Flipkart GOAT SALE): அமேசானுக்கு போட்டியாக பிளிப்கார்ட் வலைத்தளமும் வருகிற ஜூலை 4 ஆம் தேதி முதல் கோட் சேல் (GOAT SALE) என்கிற சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இதில் என்னென்ன ஐபோன் (iPhone) மாடல்கள் மீது எவ்வளவு சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்களை பிளிப்கார்ட் வலைத்தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி:
ஐபோன் 17 (iPhone 17) - ரூ.82,900 க்கு பதிலாக ரூ.70,990 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) - ரூ.1,34,900 க்கு பதிலாக ரூ.1,12,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) - ரூ.1,49,900 க்கு பதிலாக ரூ. 1,27,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 17இ (iPhone 17e) - ரூ.64,900 க்கு பதிலாக ரூ.60,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் ஏர் (iPhone Air) - ரூ.1,19,900 க்கு பதிலாக ரூ.95,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16 (iPhone 16) - ரூ.79,900 க்கு பதிலாக ரூ. 59,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) - ரூ.89,900 க்கு பதிலாக ரூ.73,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16இ (iPhone 16e) - ரூ.59,900 க்கு பதிலாக ரூ.55,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 15 (iPhone 15) - ரூ.79,900 க்கு பதிலாக ரூ.49,900 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications