Galaxy S25 சீரீஸ்-ல் புது டிவிஸ்ட்.. நாளைக்கு அறிமுகத்தை வச்சிக்கிட்டு இன்னைக்கு இப்படி சொல்லுறாங்களே!
2025 ஆம் ஆண்டின், சாம்சங் நிறுவனத்தின் முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு நடக்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளது. இந்நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் அறிமுகமாகும் என்பதையும், இதன்கீழ் வெண்ணிலா, பிளஸ் மற்றும் அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் வரும் என்பதையும் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை என்று நம்புகிறோம்.
2025 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வானது ஜனவரி 22 ஆம் தேதி, இந்திய நேரடி இரவு 11.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதை சாம்சங்.காம், சாம்சங் நியூஸ்ரூம் மற்றும் சாம்சங் யூட்யூப் சேனல் வழியாக நேரலையில் பார்க்க முடியும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி எல்லாமே "ஆல் செட்" ஆக இருக்கும் நிலைப்பாட்டில் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா தொடர்பான ஒரு திடீர் தகவல் லீக் ஆகியுள்ளது.

நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் @chunvn8888 வழியாக கிடைத்த தகவலின்படி, கேலக்ஸி எஸ்25 சீரீஸ் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட 4 நாடுகளில் மட்டுமே கேலக்ஸி எஸ்15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி வேரியண்ட் (Samsung Galaxy S25 Ultra 16GB RAM) விற்பனைக்கு வரும், மற்ற பிரதேசங்களில் வாங்க கிடைக்காது என்கிற தகவல் வெளியாகியுள்ளது
சுவாரசியமாக அந்த 4 நாடுகளில் இந்தியா உள்ளது. கூடவே தென் கொரியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய ஆசிய நாடுகளும் உள்ளன. இந்த 4 நாடுகளுக்கு வெளியே கேலக்ஸி எஸ்15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி வேரியண்ட் விற்பனைக்கு வராது என்று மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறியுள்ளார்.
எஸ் சீரிஸின் அல்ட்ரா மாடலுக்கு 12ஜிபி ரேம் என்பது எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது என்பதால், 2025 ஆம் ஆண்டில் எஸ்35 அல்ட்ராவின் 16ஜிபி ரேம் மாடலுக்கு காத்திருக்கும் (மற்ற நாட்டு) வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இதுவொரு பெரிய ஏமாற்றமாக இருக்கும். கூடுதல் செலவு செய்து 16ஜிபி ரேம் ஆப்ஷனை இறக்குமதி செய்வதை தவிர அல்லது 12ஜிபி ரேம் ஆப்ஷனையே வாங்குவதை தவிர, இவர்களுக்கு வேறு விருப்பம் இருக்காது.
குறைவான ரேம், கேலக்ஸி எஸ்25 சீரீஸின் முக்கிய விற்பனை புள்ளிகளில் ஒன்றாக பார்க்கப்படும் கேலக்ஸி ஏஐ அம்சங்களின் செயல்திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏஐ மாடல்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது செயல்திறன் இடைவெளி (Performance gap) மிகவும் குறிப்பிடத்தக்கதாகிறது. இதன்விளைவாகவே லேட்டஸ்ட் ஐபோன்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸை செயல்படுத்த ஆப்பிள் நிறுவனம் அவைகளின் ரேம்-ஐ அதிகரிக்க வேண்டியிருந்தது.
இதுதவிர்த்து வழக்கமான பெர்ஃபார்மன்ஸிலும் குறைபாடுகளை சந்திக்க நேரிடலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி வேரியண்ட் ஆனது வீடியோ எடிட்டர் போன்ற ரிசோர்ஸ்-இன்டென்சிவ் ஆன ஆப்களை இயக்கும் போது அல்லது ஒரே நேரத்தில் பல விஷயங்களை மேனேஜ் செய்ய முயற்சிக்கும் போது 16ஜிபி ரேம் ஆப்ஷனை விட ஒப்பீட்டளவில் "தாழ்வாக" இருக்கும் என்பதை மறுக்கவே முடியாது!
16ஜிபி ரேம் ஆப்ஷன் ஏன் மற்ற நாடுகளுக்கு வராது என்கிற சாம்சங் நிறுவனத்தின் முடிவிற்கு பின்னணியில் உள்ள காரணம் என்னவென்பதை டிப்ஸ்டர் வெளிப்படுத்தவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதேபோல கேலக்ஸி எஸ்25 சீரீஸின் முற்றிலும் புதிய மாடலாக எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Galaxy S25 Slim) மாடல் குறித்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஈவான் பிளாஸ் (Evan Blass) வழியாக கிடைத்த தகவலின்படி, கேலக்ஸி எஸ் 25 ஸ்லிம் மாடல் ஆனது இந்தியாவிற்கு, அவ்வளவு ஏன் அமெரிக்காவிற்கு கூட வராமல் போகலாம். மாறாக இது தென் கொரியாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படலாம். அதாவது தென் கொரியாவில் மட்டுமே வாங்க கிடைக்கும் - ஸ்லிம் ஆன, லைட் ஆன போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி இஸட் போல்ட் ஸ்பெஷல் எடிஷனை (Galaxy Z Fold Special Edition) போலவே கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் ஆனது ஒரு எக்ஸ்க்ளூஸிவ் ஆன ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








