Home
Mobile

Samsung எப்போவுமே கிங் தான்.. புது Samsung Galaxy S25 Ultra உடன் iPhone கதை முடிஞ்சுது.. என்ன விலை தெரியுமா?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட் நிகழ்வை ஜான். 22, 2025 (இன்று) கோலாகலமாக நடத்தியது. இதில் சாம்சங் கேலக்ஸி S25 (Samsung Galaxy S25),சாம்சங் கேலக்ஸி S25+ (Samsung Galaxy S25+) மற்றும் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஆகிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா பற்றிய விலை மற்றும் விற்பனை விபரங்களை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஐபோன் (iPhone) தான் கெத்து, இல்லை இல்லை ஆண்ட்ராய்டு போன் (android phone) தான் சூப்பர் கெத்து என்று பல வருடங்களாக முட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் பயனர்களின் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன் சாதனம் தான் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஸ்மார்ட்போன் சாதனம்.

Samsung எப்போவுமே கிங் தான்.. புது Samsung Galaxy S25 Ultra விலை?

Samsung எப்போவுமே கிங் தான்.. புது Samsung Galaxy S25 Ultra அறிமுகம்:

இதன் புதிய தோற்றம் (design) மிகவும் ஸ்லிம் ஆகவும், கைக்கு அடக்கமாகவும் (slim and sleek) இருந்து பார்ப்பவர்களின் கண்களை ஈர்ப்பது மட்டுமில்லாமல், இதன் அம்சங்கள் தலைசிறந்த ஐபோன் சாதனத்தையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சரி, புதிய Samsung Galaxy S25 Ultra போனில் என்னெவெல்லாம் நிறைந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா சிறப்பம்சம் (Samsung Galaxy S25 Ultra Specifications):
புதிய சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9" இன்ச் அளவு கொண்ட 3120 x 1440 பிக்சல் (pixel) உடைய குவாட் HD+ இன்பினிட்டி-ஓ-எட்ஜ் டைனமிக் LTPO AMOLED டிஸ்பிளேவை (Quad HD+ Infinity-O-Edge Dynamic AMOLED display) இந்த சாதனம் கொண்டுள்ளது. இது 1 - 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் HDR10+ சப்போர்ட் மற்றும் 2600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (peak brightness) உடன் வருகிறது.

இது கார்னிங் கொரில்லா ஆர்மர் (Corning Gorilla Armor 2) பாதுகாப்புடன் இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவாக வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12GB ரேம் (RAM) + 256GB ஸ்டோரேஜ் (storage), 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ், மற்றும் 12GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்துடன் வருகிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 200MP மையின் கேமரா வைடு ஆங்கிள் (Wide-angle) உடன் 2x ஆப்டிகல் குவாலிட்டி ஜூம் உடன் வருகிறது.

Samsung எப்போவுமே கிங் தான்.. புது Samsung Galaxy S25 Ultra விலை?

சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா கேமரா (Samsung Galaxy S25 Ultra Camera):

இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தில் 50MP அல்ட்ரா வைடு (Ultra Wide) + 50MP டெலிபோட்டோ (Telephoto) லென்ஸ் உடன் 5x ஆப்டிகல் ஜூம் & 10x ஆப்டிகல் குவாலிட்டி ஜூம் (5x Optical Zoom & 10x Optical Quality Zoom) அம்சம் + 10MP டெலிபோட்டோ 3x ஆப்டிகல் ஜூம் (3x Optical Zoom) அம்சத்தை கொண்ட கேமராவை Samsung Galaxy S25 Ultra கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் இந்த சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா 12MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் பிரத்தியேகமாக Samsung Galaxy S25 Ultra போனிற்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Snapdragon 8 Elite SoC) கொண்டுள்ளது. இது மிகவும் பவர்புல்லான சிப்செட் மாடலாகும். இந்த ஸ்மார்ட்போன் Android 15 இல் AI அம்சத்துடன் சிறப்பாக இயங்கும் புதிய One UI 7 ஓஎஸ் இயங்குதளத்துடன் இயங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா பேட்டரி (Samsung Galaxy S25 Ultra Battery):

இந்த ஸ்மார்ட்போன் டூயல் நானோ சிம் மற்றும் eSIM ஆதரவை பெறுகிறது. இது IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனம் 5G SA/NSA, 4G VoLTE, Wi-Fi 7 802.11be (2.4/5GHz), Bluetooth 5.3, UWB, GPS + GLONASS, USB-C, NFC போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா 5000mAh பேட்டரி உடை 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.

Samsung எப்போவுமே கிங் தான்.. புது Samsung Galaxy S25 Ultra விலை?

சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா விலை (Samsung Galaxy S25 Ultra Price):
- 12GB + 256GB மாடல் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1,12,390 இருக்கும்
- 12GB + 512GB மாடல் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1,22,770 இருக்கும் மற்றும்
- 12GB + 1TB மாடலின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1,43,515 விலையை பெறுகிறது.

இந்த போன் டைட்டானியம் சில்வர்ப்ளூ (Titanium Silverblue), டைட்டானியம் ப்ளாக் (Titanium Black), டைட்டானியம் கிரேய் (Titanium Gray), டைட்டானியம் வைட்சில்வர் (Titanium Whitesilver), டைட்டானியம் ஜெட்பிளாக் (Titanium Jetblack), டைட்டானியம் ஜேட்கிரீன் (Titanium Jadegreen), டைட்டானியம் பின்க்கோல்டு (Titanium Pinkgold) ஆகிய 7 நிறங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த போனின் ப்ரீ-ஆர்டர் (pre-order) இன்று முதல் துவங்குகிறது. ஜனவரி 22ம் தேதி முதல் ஷிப்பிங் (shipping) செய்யப்படும். இந்தியா போன்ற நாடுகளில் இது பிப்ரவரி 7, 2025 ஆம் தேதி கிடைக்கும் என்று சாம்சங் அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Ultra 12GB RAM 256GB 512GB 1TB Price and Specification With Sale Date Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X