நாங்க கேட்டது Slim.. அவர் கொடுத்தது Edge.. 200MP கேமரா, 6.6-இன்ச் டிஸ்பிளே உடன் புது Samsung Galaxy போன்!
2025 ஆம் ஆண்டின் முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வானது, சாம்சங் ரசிகர்களுக்கும், டெக் ஆர்வலர்களுக்கும் பல வகையான ஏமாற்றங்களை அளித்தது என்றே கூறலாம். 3 புதிய கேலக்ஸி எஸ்25 சீரீஸ் போன்கள் மற்றும் சில அட்டகாசமான புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்களை தவிர்த்து.. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட எந்த தயாரிப்பும் அந்நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவில்லை.
குறிப்பாக - சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Samsung Galaxy S25 Slim) மாடல். இது 2025 செப்டம்பரில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும்) ஆப்பிளின் ஐபோன் 17 ஏர் மாடலுக்கு போட்டியாக, முன்கூட்டியே அறிமுகமாகும் அல்லது குறைந்தபட்சம், ஜனவரி 22 அன்று நடந்த கேலக்ஸி அன்பேக்டு நிக்வில் 'டீஸ்' செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை!

இதற்கிடையில், தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) என்கிற மாடல் அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஆக இத்தனை நாட்களாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் என்கிற பெயரில் அறிமுகமாகும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்த மாடல் - சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் தானா? என்று சிலர் சிலாகித்து வருகின்றனர். சிலர் அப்செட் ஆகியும் உள்ளனர்.
ஆனால் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் குறித்து அப்செட் ஆக ஒன்றுமே இல்லை, ஏனென்றால் பெயர் மட்டுமே மாறியுள்ளது. இதுவும் (ஸ்லிம் மாடலில் எதிர்பார்க்கப்பட்டதை போலவே) மிகவும் மெல்லிய 6.5மிமீ டிசைனை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நேர்த்தியான மற்றும் அல்ட்ரா ஸ்லிம் வடிவமைப்பின் காரணமாக இதில் 3,000mAh மற்றும் 4,000mAh க்கு இடையேயான பேட்டரி தான் பேக் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் இது சக்திவாய்ந்த 200எம்பி ப்ரைமரி கேமராவைகொண்டிருக்கும் மற்றும் இதன் கேமரா செட்டப்பில் ஸ்லிம் ஆன பெரிஸ்கோப் கேமரா மாட்யூல் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை 6.66-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் மற்ற மாடல்களை போலவே லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள்: கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.80,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.99,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.99,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,11,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்25 மற்றும் எஸ்25 பிளஸ் ஆகிய இரண்டுமே ஐசி ப்ளூ, மின்ட், நேவி மற்றும் சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும்.
கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,29,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,41,999 க்கு க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் 12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,65,999 க்கும் க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் க்ரே, டைட்டானியம் சில்வர்ப்ளூ மற்றும் டைட்டானியம் ஒயிட்சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான டைட்டானியம் ஜேட்க்ரீன், டைட்டானியம் ஜெட்பிளாக் மற்றும் டைட்டானியம் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








