சுத்தம்.. இதுக்கு iPhone பரவாயில்ல போலயே.. வெறும் 3000mAh பேட்டரி உடன் புதிய Samsung போன்.. எந்த மாடல்?
பேட்டரி கெப்பாசிட்டி விஷயத்தில் ஆப்பிள் (Apple) நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமாகவே செயல்படும். மற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தத்தம் ஸ்மார்ட்போன்களின் பேட்டரியை விளம்பரப்படுத்துவது போல, ஆப்பிள் அதன் ஐபோன்களின் பேட்டரி கெப்பாசிட்டியை (iPhone's Battery Capacity) பற்றி அதிக விவரங்களை வெளிப்படுத்தாது.
பிரத்யேகமாக, தேடி ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே ஆப்பிள் ஐபோன்களின் பேட்டரி குறித்த விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும். ஒருவேளை லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஐபோன் 16 (iPhone 16) மாடலின் பேட்டரி கெப்பாசிட்டி என்னவென்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் அது - 3500mAh ஆகும்.

பேட்டரி லைஃப் குறித்து ஐபோன் யூசர்கள் அதிகம் பேசாமல் இருப்பதற்கு பின்னால், இதுபோன்ற சிறிய கெப்பாசிட்டி கொண்ட பேட்டரிகளே காரணம். இதற்கிடையில், இதைவிட குறைவான எம்ஏஎச் உடன் ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 6000mAh பேட்டரிகளுக்கு பெயர் போன சாம்சங் நிறுவனத்திடம் இருந்து!
அது என்ன மாடல்? அது - வருகிற ஜனவரி 22 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் நான்காவது மாடலாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் - சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Samsung Galaxy S25 Slim) ஸ்மார்ட்போனாகும்.
தற்போது வரையிலாக கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகிய 3 மாடல்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்நிகழ்வின் சிறப்பம்சமாக கேலக்ஸி எஸ் 25 ஸ்லிம் இருக்கலாம் என்றும், இது இதுவரை வெளியான எந்தவொரு சாம்சங் ஸ்மார்ட்போனை விடவும் மெலிதாக இருக்கும் என்றும் வதந்திகள் பரவுகிறது.
கேலக்ஸி எஸ்25 சீரீஸ் வெளியீட்டு நிகழ்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எஸ்15 ஸ்லிம் மாடல் குறித்த சில முக்கியமான விவரங்ககள் லீக் ஆகியுள்ளன. அதன் வழியாக, கேலக்ஸி எஸ் 25 ஸ்லிம் எவ்வளவு மெலிதாக இருக்கும் என்பதோடு சேர்த்து, இது கேலக்ஸி எஸ்25 சீரீஸின் மற்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது மிகச்சிறிய பேட்டரியை கொண்டிருக்கும் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
சீன சமூக ஊடகத்தளமான வெய்போவில் நன்கு அறியப்பட்ட சோர்ஸ் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் 3000mAh முதல் 4,000mAh க்குள் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் அல்ட்ரா-ஸ்லிம் டிசைன் தான், இதற்கு பின்னால் இருக்கும் காரணமாக இருக்கலாம்.
இந்த சமீபத்திய லீக்ஸ் ஆனது கேலக்ஸி எஸ் 25 ஸ்லிம் எவ்வளவு மெலிதாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தி உள்ளது. கேமரா மாட்யூலை சேர்க்காமல் இந்த ஸ்மார்ட்போனின் தடிமன் வெறும் 6.4 மிமீ மட்டுமே இருக்கும் என்றும், கேமரா மாட்யூலுடன் சேர்த்து 8.3 மிமீ இருக்குமாம்.இந்த அளவு பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் வழக்கமாக நாம் காணும் 8 மிமீ முதல் 10 மிமீ அளவை விட மிகவும் மெல்லியதாகும்
மிகவும் மெல்லிய மற்றும் நேர்த்தியான உருவாக்கத்தை பெற்றாலும் கூட, கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் அளவில் எந்த சமரசம் இருக்காதாம். இது 6.7-இன்ச் முதல் 6.8-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பெரிய டிஸ்பிளே கொண்டிருக்கும்; கூடவே அல்ட்ராவை விட இது குறுகியதாகவும், குறுகலாகவும், மெலிதாகவும் இருக்கும்.
விலையை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது. சில லீக்ஸ் இது எஸ்25 சீரீஸின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்கிறன. வேறு சில லீக்ஸ் இது ரூ.99,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கின்றன. மற்ற ஆதாரங்கள் இது ரூ.70,000-ஐ சுற்றிய விலைக்கு வரும் என்கின்றன. ஆகையால் விலை விஷயத்தில் எதையுமே உறுதியாக கூற முடியவில்லை.


Click it and Unblock the Notifications








