ஆபர் விலையில் Open Sale ஆரம்பம்.. ரூ.10000 டிஸ்கவுண்ட், ரூ.11000 எக்ஸ்சேஞ்ச்.. Samsung Galaxy S25 தெறிக்குது!
சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் (Samsung Galaxy S25 Series) கீழ் அறிமுகமான மூன்று மாடல்களுமே இன்று முதல் திறந்த விற்பனையை (Open Sale) தொடங்கின. தற்போது கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகிய 3 மாடல்களுமே ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீடெயில் சேனல்களின் வழியாக வாங்க கிடைக்கிறது.
அதாவது முக்கிய ஆன்லைன் (அமேசான், பிளிப்கார்ட்) மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளம் வழியாக வாங்க கிடைக்கிறது. அறிமுக சலுகையை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட எச்டிஎப்சி வங்கி கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.8,000 வங்கி தள்ளுபடி கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவை வாங்க உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.9,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். இதேபோல கேலக்ஸி எஸ்25 வாங்கும் எச்டிஎப்சி வங்கி கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.10,000 வங்கி தள்ளுபடி கிடைக்கும் மற்றும் ரூ.11,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும். இதுதவிர்த்து கேலக்ஸி எஸ்25 சீரீஸில் உள்ள அனைத்து மாடல்களின் மீதும் நோ காஸ்ட் இஎம்ஐ திட்டங்களும் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.80,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.92,999
சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Plus Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.99,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,11,999
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Ultra Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,29,999
12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,41,999
12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,65,999
கேலக்ஸி எஸ்25 மற்றும் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஐசி ப்ளூ, மின்ட், நேவி மற்றும் சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான ப்ளூ பிளாக், கோரல் ரெட் மற்றும் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் க்ரே, டைட்டானியம் சில்வர்ப்ளூ மற்றும் டைட்டானியம் ஒயிட்சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான டைட்டானியம் ஜேட்க்ரீன், டைட்டானியம் ஜெட்பிளாக் மற்றும் டைட்டானியம் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.2-இன்ச் டிஸ்ப்ளே, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மிதமான பயன்பாட்டின் கீழ் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் 4,000mAh பேட்டரி, முன் மற்றும் பின் இரண்டிலும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்.
கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.7-இன்ச் டிஸ்பிளே, 4,900mAh பேட்டரி, 12ஜிபி ரேம் மற்றும் 256GB மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், வெண்ணிலா எஸ்25 மாடலில் உள்ளதை போலவே 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா..
கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: பெரிய 6.9 இன்ச் டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், டைட்டானியம் பில்ட் மற்றும் கார்னிங்கின் கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்பு, 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்.


Click it and Unblock the Notifications








