2025 ஜன.22 வரை எந்த Samsung போனும் வாங்கிடாதீங்க.. பல சர்ப்ரைஸ் காத்து இருக்கு!
நீங்கள், வாங்கினால் சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போனை தான் வாங்குவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டவராக இருந்தாலும் சரி.. அல்லது 2025 ஆம் ஆண்டிலாவது ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற ஐடியாவில் இருப்பவராக இருந்தாலும் சரி.. ஜனவரி 22 ஆம் தேதி வரை காத்திருக்கவும்.
ஏனென்றால், அன்று தான் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் (Samsung Galaxy S25 Series) ஸ்மார்ட்போன்களாகும். இது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இல்லை என்றாலும் கூட, பல லீக்ஸ் தகவல்கள் இந்த தேதியை தான் சுட்டிக்காட்டுகின்றன.

இதுகுறித்த ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது, இதே வெளியீட்டு தேதியை பரிந்துரைப்பது மட்டுமின்றி விற்பனை மற்றும் முன்பதிவு தேதிகளையும் வெளிப்படுத்தியுள்ளது. எல்லாவற்றை விட சுவாரசியமாக இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Samsung Galaxy S25 Slim) பற்றிய குறிப்பும் உள்ளது.
எப்என்நியூஸ் (FNNews) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையானது, கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ் அல்ட்ரா ஆகிய மாடல்களை உள்ளடக்கிய கேலக்ஸி எஸ்25 சீரீஸின் வெளியீட்டு நிகழ்வானது, ஜனவரி 23 ஆம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு தென் கொரியாவில் தொடங்கும். அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 22 ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு தொடங்கும் நிகழ்வில் அறிமுகமாகும்.
மேலும் அந்த அறிக்கை, எஸ்25 சீரீஸின் பரீ-ஆர்டர் விண்டோவானது (Samsung Galaxy S25 Series Pre-order Window) 2025 ஜனவரி 24 முதல் பிப்ரவரி 3 வரை திறந்திருக்கும் என்பதையும், இந்த போன்கள் பிப்ரவரி 7ம் தேதி முதல் விற்பனைக்கு வரலாம் என்பதையும் குறிப்பிடுகிறது. நேர மண்டல வேறுபாடுகள் காரணமாக, உலகளாவிய விற்பனை தேதியானது, ஒரு நாள் முன்னதாக இருக்கலாம், அதாவது பிப்ரவரி 6 முதல் தொடங்கலாம்.
முன்னதாக, கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் நான்காவது மாடல் ஆக கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் அறிமுகமாகும் என்கிற தகவலொன்றும் வெளியாகி இருந்தது. எப்என்நியூஸ்-ன் அறிக்கை அதுகுறித்தும் பேசுகிறது. இது கேலக்ஸி எஸ்25 சீரீஸ் அறிமுகமாகும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் மாடலும் அறிமுகமாகும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால் வேறுசில அறிக்கைகள், இந்த மாடல் பின்னர் வெளியிடப்படும் என்று பரிந்துரைக்கின்றன
ஒருவேளை இந்நிகழ்வில் ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்படாவிட்டால், இந்நிகழ்வின் ஹைட்லட் ஆக கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) ஸ்மார்ட்போன் இருக்கும். ஏனென்றால் டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (Ice Universe) வழியாக கிடைத்த தகவலின்படி, இது மிகவும் குறுகிய பெசல்களை கொண்டிருக்கும்.
இது ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 16 Pro Max) மற்றும் சியோமி 15 (Xiaomi 15) போன்ற போட்டியாளர்களில் இருக்கும் பெசல்களை விட மிகவும் ஸ்லிம் ஆன பெசல்களை கொண்டிருக்கும் என்கிற டாஃவள் வெளியாகி உள்ளது. விலையை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 தோராயமாக ரூ.67,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் தோராயமாக ரூ.84,000 க்கும் மற்றும் கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா தோராயமாக ரூ.1,10,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். புதிய கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் மாடலின் விலை குறித்து தகவல் இல்லை. ஏனென்றால் இது அறிமுகம் செய்யப்படும் என்பது வெறும் யூகமாகேவ இருக்கிறது. ஒருவேளை அறிமுகமானால் நிச்சயம் இது மற்ற 3 மாடல்களை விடவும் விலை அதிகமானதாக இருக்கும்!


Click it and Unblock the Notifications








