Home
Mobile

Amazon-ல் சைலன்ட் ஆக ஆரம்பமான இந்திய விற்பனை.. Samsung Galaxy S25 சீரீஸ்.. என்னென்ன மாடல் என்ன விலை?

ஒருவழியாக சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் இந்திய விற்பனையை (Galaxy S25 Series India Sale) தொடங்கியது. கடந்த மாதம் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் அறிமுகமான மூன்று மாடல்களுமே (கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா) தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 (Samsung Galaxy Unpacked 2025) நிகழ்வில் அறிமுகமானதுமே, இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைத்தன. தற்போது இந்த 3 மாடல்களுமே அமேசான் வழியாக வாங்க கிடைக்கின்றன.

Samsung Galaxy S25: Amazon-ல் சைலன்ட் ஆக ஆரம்பமான இந்திய விற்பனை!

முன்னதாக கேலக்ஸி எஸ்25 (Galaxy S25), கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Galaxy S25 Plus) ஆகிய மாடல்கள் மட்டுமே பிப்ரவரி 3 ஆமா தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) மாடல் ஆனது பிப்ரவரி 7 ஆம் தேதி தான் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அமேசானில் இந்த 3 மாடல்களுமே ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் விலை (Samsung Galaxy S25 5G Price) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.80,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.92,999

Samsung Galaxy S25: Amazon-ல் சைலன்ட் ஆக ஆரம்பமான இந்திய விற்பனை!

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் (Samsung Galaxy S25 Plus 5G Price) விலை விவரங்கள்:
12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.99,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,11,999

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் (Samsung Galaxy S25 Ultra 5G Price) விலை விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,29,999
12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,41,999
12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,65,999

கேலக்ஸி எஸ்25 மற்றும் எஸ்25 பிளஸ் கலர் ஆப்ஷன்கள்: இரண்டுமே ஐசி ப்ளூ, மின்ட், நேவி மற்றும் சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான ப்ளூ பிளாக், கோரல் ரெட் மற்றும் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்

கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா கலர் ஆப்ஷன்கள்: இது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் க்ரே, டைட்டானியம் சில்வர்ப்ளூ மற்றும் டைட்டானியம் ஒயிட்சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் (Samsung Website) இருந்து பிரத்தியேகமான டைட்டானியம் ஜேட்க்ரீன், டைட்டானியம் ஜெட்பிளாக் மற்றும் டைட்டானியம் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் மீது ப்ரீ-ஆர்டர் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.21,000 மதிப்பிலான ப்ரீ-ஆர்டர் நன்மைகளை பெறுவார்கள். இதில் ரூ.12,000 மதிப்புள்ள ஸ்டோரேஜ் அப்கிரேட்டும் அடங்கும். இதன்கீழ் வாடிக்கையாளர்கள் 12ஜிபி + 256ஜிபி மாறுபாட்டின் விலையில் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷனை பெற முடியும். மேலும் ரூ.9000அப்கிரேட் போனஸும் கிடைக்கும்.

இதேபோல் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.12,000 மதிப்பிலான ப்ரீ-ஆர்டர் நன்மைகளை பெறுவார்கள். இதன்கீழ் வாடிக்கையாளர்கள் 12ஜிபி + 256ஜிபி மாறுபாட்டின் விலையில் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷனை பெற முடியும். கடைசியாக கேலக்ஸி எஸ்25 மாடலை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.11,000 மதிப்பிலான அப்கிரேடட் போனஸை பெறுவார்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Series India Sale Started in Amazon See Price Storage Color Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X