Home
Mobile

ரூ.21,000 ஆபர்.. Samsung Galaxy S25 சீரீஸ் அறிமுகம்.. இந்தியாவில் எவ்வளவு விலை? எப்போது முதல் விற்பனை?

எதிர்பார்த்தபடியே கேலக்ஸி அன்பேக்டு 2025 (Galaxy Unpacked 2025) நிகழ்வில் சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் (Galaxy S25 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்தது. இந்த சீரிஸின் கீழ் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன!

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.80,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.99,999

Samsung Galaxy S25 சீரீஸ் அறிமுகம்.. இந்தியாவில் எவ்வளவு விலை?

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Plus Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.99,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,11,999

கேலக்ஸி எஸ்25 மற்றும் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஐசி ப்ளூ, மின்ட், நேவி மற்றும் சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான ப்ளூ பிளாக், கோரல் ரெட் மற்றும் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் இன்று முதல் தொடங்குகின்றன; பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Ultra Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,29,999
12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,41,999
12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,65,999

கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் க்ரே, டைட்டானியம் சில்வர்ப்ளூ மற்றும் டைட்டானியம் ஒயிட்சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான டைட்டானியம் ஜேட்க்ரீன், டைட்டானியம் ஜெட்பிளாக் மற்றும் டைட்டானியம் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் இன்று முதல் தொடங்குகின்றன; பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் மீதான ப்ரீ-ஆர்டர் சலுகைகள் (Galaxy S25 Series Pre-order Offers): கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.21,000 மதிப்பிலான ப்ரீ-ஆர்டர் நன்மைகளை பெறுவார்கள். இதில் ரூ.12,000 மதிப்புள்ள ஸ்டோரேஜ் அப்கிரேட்டும் அடங்கும். இதன்கீழ் வாடிக்கையாளர்கள் 12ஜிபி + 256ஜிபி மாறுபாட்டின் விலையில் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷனை பெற முடியும். மேலும் ரூ.9000அப்கிரேட் போனஸும் கிடைக்கும்.

கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.12,000 மதிப்பிலான ப்ரீ-ஆர்டர் நன்மைகளை பெறுவார்கள். இதன்கீழ் வாடிக்கையாளர்கள் 12ஜிபி + 256ஜிபி மாறுபாட்டின் விலையில் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷனை பெற முடியும். கடைசியாக கேலக்ஸி எஸ்25 மாடலை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.11,000 மதிப்பிலான அப்கிரேடட் போனஸை பெறுவார்கள்

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Series India Price Details Pre order Offers Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X