Home
Mobile

2023 வரை.. இந்த 3 Samsung போன்களும்.. Android 23 OS வரைக்கும் அப்டேட் கிடைக்கும் என அறிவிப்பு!

சாம்சங் (Samsung) நிறுவனம் கடந்த 2025 ஜனவரியில், உலகம் முழுவதும் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. பின்னர் சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25, எஸ்25 பிளஸ் மற்றும் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் எண்டர்பிரைஸ் எடிஷன்களை 2025 பிப்ரவரியில் அறிமுகம் செய்தது.

ஸ்டாண்டர்ட் மாடல்களை விட நீண்ட சாஃப்ட்வேர் சப்போர்ட்: "வழக்கமான" எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 7 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் மேம்படுத்தல்களையும், 7 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் (அதிகாரப்பூர்வ சாம்சங் நாக்ஸ் வலைத்தளத்தின்படி) கேலக்ஸி எஸ்25 சீரீஸ் எண்டர்பிரைஸ் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஸ்டாண்டர்ட் மாடல்களை விட நீண்ட சாஃப்ட்வேர் சப்போர்ட்-ஐ பெறும்.

இந்த 3 Samsung போன்களும் Android 23 OS வரைக்கும் அப்டேட்!

8 மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்: கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா எண்டர்பிரைஸ் எடிஷன்கள் 8 மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களுக்கு தகுதியானவை என்பதை சாம்சங் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 15 அவுட் ஆப் பாக்ஸ் உடன் அனுப்பப்படுகின்றன மற்றும் இவைகள் அனைத்துமே ஆண்ட்ராய்டு 23 வரையிலான அப்டேட்களை பெறும்.

ஜனவரி 2032 வரை: இது ஸ்டாண்டர்ட் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் மாடல்களை விட 1 ஆண்ட்ராய்டு வெர்ஷன் அதிகமாகும். ஸ்டாண்டர்ட் மாடல்கள் ஆண்ட்ராய்டு 22 அப்டேட் உடன் சாஃப்ட்வேர் சப்போர்ட்-ஐ இழக்கும். எண்டர்பிரைஸ் எடிஷன்களுக்கான இந்த நீட்டிக்கப்பட்ட ஆதரவு ஒன்றும் புதிய விஷயம் அல்ல. சாம்சங் நிறுவனம் பொதுவாகவே "வணிகத்தை மையமாக கொண்ட" டிவைஸ்களுக்கு நீண்டகால அப்டேட்களை ஒதுக்குகிறது. ஓஎஸ் அப்டேட்களுடன், இந்த மாடல்கள் ஜனவரி 2032 வரை செக்யூரிட்டி பேட்ச்களையும் பெறும்.

இந்த 3 Samsung போன்களும் Android 23 OS வரைக்கும் அப்டேட்!

கேலக்ஸி எஸ்25 சீரிஸ் எண்டர்பிரைஸ் எடிஷன் என்றால் என்ன? சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் எண்டர்பிரைஸ் எடிஷன், வணிகத்தை மையமாகக் கொண்ட மேம்பாடுகளின் தொகுப்பை வழங்குவதன் மூலம் ஸ்டாண்டர்ட் மாடல்களிலிருந்து தனித்து நிற்கிறது. இந்த மாடல்கள் - மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தொலைதூர சாதன மேலாண்மைக்கான ஒரு வருட இலவச சாம்சங் நாக்ஸ் சூட் சந்தாவுடன், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வணிக ஆதரவுடன் வருகிறது.

ஏஐ அடிப்படையிலான டூல்: மேலும் எண்டர்பிரைஸ் எடிஷன்களில் சம்மரிகளுடன் கால் டிரான்ஸ்கிரிப்ஷன், மீட்டிங் ரெகார்ட் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் தொழில்முறை இமெயில்களுக்கான ரைட் அசிஸ்ட் அம்சம் போன்ற ஏஐ அடிப்படையிலான டூல்களும் கிடைக்கும். ஹார்ட்வேரில் எந்த மாற்றங்களும் இருக்காது. அதாவது இவைகள் வழக்கமான எஸ்25 மாடல்களில் உள்ள அதே அம்சங்களைத்தான் கொண்டிருக்கும்.

இந்த 3 Samsung போன்களும் Android 23 OS வரைக்கும் அப்டேட்!

ஒன் யுஐ7 அப்டேட்: இதற்கிடையில் சாம்சங் நிறுவனம் அதன் ஒன் யுஐ7 அப்டேட் (One UI 7 Update) ஆனது வெளியிடப்பட தயாராக உள்ளது. சாம்சங்கின் இந்த புதிய சாஃப்ட்வேர் அப்டேட் ஆனது பல்வேறு வகையான கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு புதிய டிசைன் மற்றும் பல ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுவர உள்ளது.

ஒன் யுஐ7 அப்டேட் லான்ச் டேட் மற்றும் லான்ச் டைம்லைன்: சாம்சங் நிறுவனம் அதன் ஸ்டேபிள் ஒன் யுஐ7 அப்டேட்-ஐ ஏப்ரல் 7, 2025 முதல் வெளியிட தொடங்கும். இந்த அப்டேட்-ஐ பெறும் முதல் ஸ்மார்ட்போன்களாக, கேலக்ஸி எஸ்24 சீரீஸ் இருக்கும். அதை தொடர்ந்து மற்ற பிளாக்ஷிப் மாடல்களுக்கு ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும். பயனர்கள் தங்கள் டிவைஸ் மாடல் மற்றும் பிராந்தியத்தை பொறுத்து படிப்படியான வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

இந்த 3 Samsung போன்களும் Android 23 OS வரைக்கும் அப்டேட்!

ஒன் யுஐ 7 அப்டேட்-க்கு தகுதியான சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்களின் பட்டியல்: சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24), சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus), சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra), சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE).

சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23), சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் (Samsung Galaxy S23 Plus), சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra), சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE), சாம்சங் கேலக்ஸி ஏ55 (Samsung Galaxy A55)

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6), சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6), சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5)

ஒன் யுஐ7 அப்டேட்-ஐ எவ்வாறு பதிவிறக்குவது? உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஒன் யுஐ7 அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்க, செட்டிங்ஸ் > சாஃப்ட்வேர் அப்டேட் > டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் என்பதற்கு செல்லவும். உங்கள் மாடலுக்கு அப்டேட் வந்து இருந்தால், அது தானாகவே பதிவிறக்க தொடங்கும். அப்டேட் செய்ய தொடங்குவதற்கு முன் உங்கள் ஸ்மார்ட்போன் வைஃபை உடன் இணைக்கப்பட்டு, போதுமான பேட்டரி அள்வு கொண்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.

சுவாரஸ்யமாக, இந்த பட்டியலில் சாம்சங் கேலக்ஸி ஏ55 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ35 (Samsung Galaxy A35) இடம் பெறவில்லை. சாம்சங் நிறுவனம் பின்னர் இதை சேர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போன்ற சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே ஒன் யுஐ 7 அவுட் ஆப் பாக்ஸ் உடன் அனுப்பப்படுகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதோடு சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகி உள்ளது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் 2025 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியானது. குறிப்பாக இது ஏப்ரல் 14 அல்லது 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

தற்போது டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலானது - சாம்சங் கேலக்ஸி எஸ்25 லாட்ஜ் ஸ்மார்ட்போனின் ஏப்ரல் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 2025 மே 13 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும். அதாவது சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை ஒரு மாதம் தாமதப்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,13,660 முதல் ரூ.1,23,132 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 512ஜிபி ஆப்ஷனதோராயமாக ரூ.1,23,132 முதல் ரூ.1,32,603 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Series Enterprise Edition Will Get 8 Major Android OS Update Until Android 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X