Samsung ரசிகர்களே.. மனச இரும்பாக்கிகோங்க.. Galaxy S25 சீரீஸின் 3 மாடல்களின் விலைகளும் லீக்!
இருங்க பாய்.. 2025 ஜனவரி 22 ஆம் தேதி வரட்டும் என்று பலரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் அன்று தான் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் (Samsung Galaxy S25 Series) ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வானது ஜனவரி 22 ஆம் தேதி இந்திய நேரடி இரவு 10:30 மணிக்கு தொடங்கும் என்றும் இது சாம்சங்.காம், சாம்சங் நியூஸ்ரூம் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ், சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25), சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Samsung Galaxy S25 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த 3 மாடல்களின் ஐரோப்பிய விலை விவரங்கள், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் ஆனது 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி ஆகிய ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் 128ஜிபி வேரியண்ட் இல்லாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது. எல்லாவற்றை விட முக்கியமாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் 1டிபி ஸ்டோரேஜ் பேக் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, 91மொபைல்ஸ் இந்தோனேஷியா வழியாக கிடைத்த தகவலின்படி வெண்ணிலா மற்றும் பிளஸ் வேரியண்ட்கள் ஆனது ஐஸி ப்ளூ, மின்ட், நேவி மற்றும் சில்வர் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் டைட்டானியம் சில்வர் ப்ளூ ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
விலை விவரங்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (Samsung Galaxy S25 Price) இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.85,000 க்கும், 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.90,000 க்கும் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,00,000 க்கும் அறிமுகமாகலாம்.
அடுத்ததாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (Samsung Galaxy S25 Plus Price) இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,09,000 க்கும் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1.20,200 க்கும் அறிமுகமாகலாம்
கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (Samsung Galaxy S25 Ultra Price) இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,37,000 க்கும், 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,48,000 க்கும் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,70,000 க்கும் அறிமுகமாகலாம்
சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Samsung Galaxy S25 Ultra) என்கிற புதிய மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு அன்பேக்டு 2025 நிகழ்வில், சாம்சங் நிறுவனம் அதன் ப்ராஜக்ட் மூஹன் (Project Moohan) என அழைக்கப்படும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (Extended reality - XR) ஹெட்செட்டை அறிமுகப்படுத்தலாம். இது கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் இயங்குதளத்தின் (Google new Android XR platform) கீழ் இயங்குகிறது. இதோடு கேலக்ஸி ரிங் 2 (Galaxy Ring 2) ஸ்மார்ட் ரிங்கும் அறிமுகம் செய்யப்படலாம்!


Click it and Unblock the Notifications








