மொரட்டு ஆஃபர்.. ரூ.8,000 ரேட் கட்.. OIS கேமரா.. 4900mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 4900mAh பேட்டரி, டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்25+ (Samsung Galaxy S25+) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. முழுதாக ரூ.8,000 தள்ளுபடி கிடைப்பதால், சாம்சங் பிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் செய்ய தொடங்கிவிட்டனர். இந்த சாம்சங் போனின் விவரங்கள் இதோ.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25+ போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,11,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.8,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக இப்போது வாங்க கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,03,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த ரூ.8,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

இதே எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.7,000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்கள் போக ரூ.65,050 மத்திப்பில் உங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞச் செய்து கொள்ளலாம். நேவி (Navy) மற்றும் சில்வர் ஷேடோ (Silver Shadow) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. டிசைன் எப்படி?
அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போனாக இருப்பதால், ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் மற்றும் ரீசைக்கிள்டு கோபால்டு பேட்டரி கிடைக்கிறது. இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்டன் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஓஎஸ் அப்கிரேட்கள் எப்படி?
இந்த இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25+ போனில் ஓஎஸ் அப்கிரேட்களுக்கு கவலையில்லை. ஏனென்றால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் அதற்கு மேல் 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட்களை கொடுக்கிறது. அதே 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் சாம்சங் கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடிகிறது. பீச்சர்கள் எப்படி?

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy S25 Plus Specifications): இந்த கேலக்ஸி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. முந்தைய மாடல்களை போல ஓஐஎஸ் (OIS), 3X ஆப்டிகல் ஜூமிங் உள்ளது.
12 எம்பி செல்பீ கிடைக்கிறது. 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்பே சொன்னதை போல கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளது.
அதேபோல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமல்லாமல், கேலக்ஸி ஏஐ பீச்சர்களுக்கு ஏற்ப ஒன் யுஐ 7 (One UI 7) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரீமியம் விலைக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி கேலக்ஸி மாடல்களுக்காக அப்கிரேட் செய்யப்பட்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25+ போனில் 4900mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்/வயர்லெஸ் பவர் ஷேரிங் கிடைக்கிறது. நைட்போட்டோகிராபி, நவ் பார், போட்டோ அசிஸ்ட், ரைட்டிங் அசிஸ்ட் போன்ற ஏஐ பீச்சர்களை இந்த போன் கொடுக்கிறது. பிரீமியம் பிரியர்களுக்கு ஏற்றது.


Click it and Unblock the Notifications








