Home
Mobile

மார்கெட் அதிருது.. QHD+ டிஸ்பிளே.. 12GB ரேம்.. OIS கேமரா.. 4900mAh பேட்டரி.. Samsung Galaxy S25 Plus அறிமுகம்!

கியூஎச்டி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 10 எம்பி டெலிபோட்டோ கேமரா, 4900mAh பேட்டரி மட்டுமல்லாமல், கால் டிரான்ஸ்கிரிப்ட், டிராயிங் அசிஸ்ட், ரைட்டிங் அசிஸ்ட், ஜெமினி அசிஸ்டன்ட் மற்றும் சர்க்கிள் டூ சர்ச்ச் போன்ற ஏஐ பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Samsung Galaxy S25 Plus) வெளியாகி இருக்கிறது. இந்த கேலக்ஸி போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy S25 Plus Specifications): இந்த சாம்சங் போனில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், விஷன் பூஸ்டர் (Vision Booster) மற்றும் அடாப்டிவ் கலர் டோன் (Adaptive Color Tone) கிடைக்கிறது.

மார்கெட் அதிருது.. QHD+ டிஸ்பிளே.. 12GB ரேம்.. OIS கேமரா.. எந்த மாடல்?

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி 2 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் (Fast Wireless Charging) மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) சப்போர்ட் கொண்ட 4900mAh பேட்டரி வருகிறது. இந்த சார்ஜிங் மூலம் வெறும் 30 நிமிடங்களில் 65 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.

12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. வைடு கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் வருகிறது. ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது.கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்களை பார்க்கையில் சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), சைடு பட்டன் ஆக்டிவேட் கொண்ட ஜெமினி (Gemini) அசிஸ்டன்ட், கால் டிரான்ஸ்கிரிப்ட் (Call Transcript) கிடைக்கிறது.

மார்கெட் அதிருது.. QHD+ டிஸ்பிளே.. 12GB ரேம்.. OIS கேமரா.. எந்த மாடல்?

மேலும், ரைட்டிங் அசிஸ்ட் (Writing Assist), டிராயிங் அசிஸ்ட் (Drawing Assist) மற்றும் பர்சோனல் டேட்டா என்ஜின் (Personal Data Engine) சப்போர்ட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் போனில் IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 1.5 மீட்டர்கள் ஆழம் வரையில் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் வி5.4 (Bluetooth v5.4) வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் விலை (Samsung Galaxy S25 Plus Price): இந்த சாம்சங் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை 999.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.86,455) ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை 1119.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.96,830) ஆக இருக்கிறது. இந்திய விலையில் மாற்றம் இருக்கும். ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது.

பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஷிப்பிங் தொடங்குகிறது. இந்திய விலை மற்றும் விற்பனை தேதி விரைவில் வெளியாக இருக்கிறது. நேவி (Navy), சில்வர் ஷேடோ (Silver Shadow), ஐஸ்ப்ளூ (Icyblue)மற்றும் மின்ட் (Mint) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இங்கும் பிப்ரவரியில் விற்பனை தொடங்கலாம்.

Image Credits: Samsung

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Plus With 12GB RAM Launched Check Sale Date Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X