Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அறிமுகம்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 512ஜிபி மெமரி.. என்ன விலை?

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு 2025 (Galaxy Unpacked 2025) நிகழ்ச்சியில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25) ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அம்சங்கள் (Samsung Galaxy S25 Specifications): 6.2-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் QHD+ இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்பிளே (Infinity-O Dynamic AMOLED 2X Display) வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3120 x 1440 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அறிமுகம்.. 50எம்பி கேமரா.. என்ன விலை?

50எம்பி பிரைமரி கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் 4கே மற்றும் 8கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.

தரமான ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட்(Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

12ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதேபோல் One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை 7 802.11பிஇ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 போனில் உள்ளன. இதுதவிர மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 விலை:
12ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 மாடலின் விலை $799 (இந்திய மதிப்பில் ரூ.69,160)
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 மாடலின் விலை $859 (இந்திய மதிப்பில் ரூ.74,160)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 மாடலின் விலை Euros 1079 (இந்திய மதிப்பில் ரூ.97,160)

photo credit: samsungmobilepress, samsung

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 launched in the global: check specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X