Home
Mobile

Samsung Galaxy S25 சீரீஸ் இன்று அறிமுகம்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

சாம்சங் நிறுவனத்தின் 2025 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்25 சீரீஸ் இன்று (ஜனவரி 22 ஆம் தேதி) இரவு, இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகிறது. இதன்கீழ் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படுமா அல்லது நான்காவதாக புதிய "ஸ்லிம்" மாடலும் அறிமுகமாகுமா என்கிற கேள்விக்கு மத்தியில்.. கேலக்ஸி எஸ்25 சீரீஸின் 3 மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான தருண் வாட்ஸ் (@tarunvats33) சாம்சங் கேலக்ஸி எஸ்25, சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகிய 3 மாடல்களின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் சேர்த்து அவைகளின் இந்திய விலை விவரங்களையும் லீக் செய்துள்ளார். இவரின் கூற்றுப்படி சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ ஆனது கேலக்ஸி எஸ்24 சீரீஸை விட விலை உயர்ந்ததாக இருக்கும்.

Samsung Galaxy S25 சீரீஸ் இன்று அறிமுகம்.. விலை, அம்சங்கள்?

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் விலை விவரங்கள் (Samsung Galaxy S25 Price in India): இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வெளியாகலாம். அது ரூ.94,999 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.74,999 க்கு அறிமுகமானது. ஆக புதிதா மாடல் ரூ.10,000 அதிக விலைக்கு வரும் என்பது போல் தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் விலை விவரங்கள் (Samsung Galaxy S25 Plus Price in India): இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1.04,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படலாம். அதன் விலை ரூ.1,14,999 ஆக நிர்ணயம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.99,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆக புதிய பிளஸ் மாடல் ஆனது பழையதை விட ரூ.5000 அதிக விலைக்கு அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் விலை விவரங்கள் (Samsung Galaxy S25 Plus Price in India): இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1.34,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,44,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும் இது 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.1,64,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,29,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆக புதிய பிளஸ் மாடலும் ரூ.5000 என்கிற விலை அதிகரிப்பை காணும் என்பது போல் தெரிகிறது.

கேலக்ஸி எஸ்25 சீரிஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?: அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை பேக் செய்யலாம். இது 6.8-இன்ச் அல்லது 6.9-இன்ச் அளவிலான AMOLED QHD+ டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது குவாட்-ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். பெரும்பாலும் இதில் 50 மெகாபிக்சல் 5எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ், 3எக்ஸ்டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா-வைட் கேமராவுடன் 200 மெகாபிக்சல் பிரைமரி வைட் கேமராவை தக்கவைக்கப்படலாம்.

கேலக்ஸி எஸ்25 மற்றும் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடல்களை பொறுத்தவரை, இவைகளும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். பிளஸ் மாடல் ஆனது சுமார் 6.7-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். வெண்ணிலா வேரியண்ட் ஆன எஸ்25 ஆனது சற்றே சிறிய 6.2-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Galaxy S25 Plus Galaxy S25 Ultra Launching in India Today January 22 Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X