Home
Mobile

ரூ.10,000 எக்ஸ்ட்ரா.. எடுத்தேன் பாரு ஒட்டம்.. Samsung Galaxy S25 சீரீஸ் இந்திய விலை.. ஷாக் ஆன இந்தியர்கள்!

ஒரு பெரிய பட்டாளமே 2025 ஜனவரி 22 ஆம் தேதிக்காக காத்து கொண்டிருக்கிறது. சாம்சங் ரசிகர்கள் மட்டுமின்றி ஆப்பிள் ஐபோன், ஒன்பிளஸ், ஷாவ்மீ ரசிகர்கள் கூட ஜனவரி 22 ஆம் தேதிக்காக காத்திருக்கின்றனர். ஏனென்றால் அன்றுதான் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் (Samsung Galaxy S25 Series) ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகமாக உள்ளன.

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு இன்னும் ஒரு சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலைப்பாட்டில், சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் 3 ஸ்மார்ட்போன்களின் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்களும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. என்னென்ன மாடல்கள் என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ரூ.10,000 எக்ஸ்ட்ரா.. எடுத்தேன் பாரு ஒட்டம்.. Samsung Galaxy S25!

தருண் வாட்ஸ் (@tarunvats33) வழியாக கிடைத்துள்ள இந்த விலை விவரங்களை பார்க்கும் போது, கேலக்ஸி எஸ்25 சீரீஸின் அனைத்து மாடல்களுமே அவற்றின் முன்னோடிகளை விட (அதாவது கேலக்ஸி எஸ்24 சீரீஸை விட) விலை உயர்ந்ததாக இருக்கும் என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது.

கிடைத்துள்ள விவரங்ககளின்படி கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.94,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.74,999 க்கு அறிமுகமானது.

அடுத்ததாக, சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1.04,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,14,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.99,999 க்கு அறிமுகமானது.

கடைசியாக, சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1.34,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,44,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸின் பிரீமியம் வேரியண்ட் ஆன இது 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.1,64,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,29,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

அதாவது மொத்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் மாடல்களுமே சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸை விட குறைந்தது ரூ.5,000 முதல் மற்றும் அதிகபட்சம் ரூ.10,000 வரையிலான அதிக விலை நிர்ணயத்தை பெறலாம் என்பது போல் தெரிகிறது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் - சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸில் இடம்பெறவுள்ள புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் தான் காரணம் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வை லைவ் ஆக பார்ப்பது எப்படி? இந்நிகழ்வு ஜனவரி 22 ஆம் தேதி, இந்திய நேரடி இரவு 11.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு சாம்சங்.காம் (Samsung.com), சாம்சங் நியூஸ்ரூம் (Samsung Newsroom) மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் (Samsung YouTube) வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் பெரும்பாலும் 3 மாடல்கள் மட்டுமே அறிமுகமாகும். அதாவது "வழக்கம் போல" கேலக்ஸி எஸ்25 (Galaxy S25), கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Galaxy S25 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) அறிமுகமாகும். ஒருவேளை வாய்ப்புகள் இருந்தால் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Galaxy S25 Slim) என்கிற புதிய மாடலும் அறிவிக்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Galaxy S25 Plus Galaxy S25 Ultra India Price Leaked Ahead Launch on January 22
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X