Samsung ஒரே போடு.. ரூ.12,000 போனஸ்.. ரூ.5,000 கேஷ்பேக்.. இந்த புது Galaxy போனை விட்ராதீங்க.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்25 எப்இ (Galaxy S25 FE) ஸ்மார்ட்போனின் விற்பனையானது, ரூ.12,000 ஸ்டோரேஜ் அப்கிரேட் போனஸ் மற்றும் ரூ.5,000 பேங்க் கேஷ்பேக் ஆஃபருடன் இந்திய மார்கெட்டில் தொடங்கி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 4,900mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், அப்கிரேடட் கேலக்ஸி ஏஐ பீச்சர்களுடன் கிடைக்கிறது. இந்த கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.65,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.77,999ஆகவும் இருக்கிறது. பல்வேறு அறிமுக சலுகைகளுடன் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சாம்சங் ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதில் ரூ.12,000 ஸ்டோரேஜ் அப்கிரேட் போனஸ் கிடைக்கிறது. அதாவது, 256 ஜிபி வேரியண்ட்டுக்கான பட்ஜெட்டில் 512 ஜிபி வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.5,000 பேங்க் கேஷ்பேக் மற்றும் 24 மாதங்களுக்கான நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ஆகவே, ரூ.65,999 பட்ஜெட்டில் 512 ஜிபி மாடலை வாங்கி கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட டெகா கோர் எக்ஸினோஸ் 2400 4என்எம் (Deca Core Exynos 2400 4nm) சிப்செட் கிடைக்கிறது. 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.
ஜெமினி லைவ் (Gemini Live), நவ் பார் (Now Bar), சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search) மற்றும் ஆடியோ எரைஸ் (Audio Erase) போன்ற கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்களுடன் ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு வழக்கமாக கிடைக்கும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி, 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,900mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. பேட்டரியுடன் 7.4 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனுக்கு ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் (Armor Aluminum Frame) மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. நேவி (Navy), ஜேட் பிளாக் (Jet Black) மற்றும் ஒயிட் (White) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications