Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்க போகுது.. ரூ.17,001 ஆஃபரில் Samsung போன்.. OIS கேமரா.. 4900mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்க இருக்கும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனையில் பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்க இருக்கின்றன. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போன் அதிக தள்ளுபடியுடன் கிடைக்க இருக்கிறது.

வருகிற அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் தொடங்க இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.46,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,001 தள்ளுபடியும் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்க போகுது.. ரூ.17,001 ஆஃபரில் Samsung போன்!

ஆகவே, ரூ.42,998 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையிலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் வெளியாகிய போது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆக இருந்தது. இப்போது, நேரடியாக விலை குறைப்பில் கிடைக்க இருக்கிறது.

இந்த விலை குறைப்பு மற்றும் பேங்க் கார்டுகள் தள்ளுபடியுடன் அறிமுக விலையில் இருந்து ரூ.17,001 தள்ளுபடியில் வாங்கி கொள்ள முடியும். ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் (Armor Aluminum Frame) டிசைனில் நேவி (Navy), ஜேட் பிளாக் (Jet Black) மற்றும் ஒயிட் (White) கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெகா கோர் எக்ஸினோஸ் 2400 4என்எம் (Deca Core Exynos 2400 4nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்படுகிறது. இருப்பினும், 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்களை பெறலாம்.

இதுபோக 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது. ஆகவே, கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்கள் வருகின்றன. இதில் ஜெமினி லைவ் (Gemini Live) மட்டுமல்லாமல், நவ் பார் (Now Bar), சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search), ஆடியோ எரைஸ் (Audio Erase) உள்ளிட்ட பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுத்து உள்ளது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 7.4 எம்எம் தடிமனுடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,900mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 FE With 8GB RAM Available At Rs 46999 in Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X