Home
Mobile

மொத்த மார்கெட் வெயிட்டிங்.. OIS கேமரா.. LTPO டிஸ்பிளே.. 4900mAh பேட்டரி.. 45W சார்ஜ்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) மாடலின் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, வெளியாகும் மாதம் குறித்த விவரங்கள் கசிந்துவிட்டன. இப்போது, கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போன் எப்போது வெளியாக இருக்கிறது, பீச்சர்கள் எப்படி உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25), சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Samsung Galaxy S25+) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஆகிய மாடல்கள் வெளியாகி 6 மாதங்களாகியும், சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போனுக்கான எதிர்பார்ப்பானது, சாம்சங் பிரியர்களிடையே துளியும் குறையவில்லை.

மொத்த மார்கெட் வெயிட்டிங்! OIS கேமரா! LTPO டிஸ்பிளே.. 4900mAh பேட்டரி!

ஏனென்றால், இந்த எப்இ மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்தியாவிலும் முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனாலேயே, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ மாடலுக்கு இங்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் அதன் முழு பீச்சர்கள் கசிந்துவிட்டன.

செப்டம்பர் மாதம் இந்த போன் வெளியாகும் என்று ஏற்கனவே மார்கெட்டில் தகவல்கள் கசிந்தன. ஆனால், பீச்சர்கள் கசியாமல் இருந்தது. இப்போது, கேமரா, சிப்செட், பேட்டரி, ஓஎஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் கசிந்துவிட்டன. இதில் சிப்செட் மற்றும் பேட்டரி பக்காவாக இருக்கிறது. எஸ்25 மாடலின் 4000mAh பேட்டரி கிடைத்தது.

ஆனால், இந்த எஸ்25 எப்இ மாடலில் 4900mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஆகவே, அதைவிட கூடுதல் பேக்கப் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ மாடலுடன் ஒப்பிடுகையில், அதே 200mAh பேட்டரி அதிகமாக இருக்கிறது. அதேபோல ஃபாஸ்ட் சார்ஜிங் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் பார்க்க முடிகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): இந்த பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. சாம்சங் நிறுவனத்தால், உறுதி செய்யப்படவில்லை. எக்ஸினோஸ் 2400 எஸ்ஓசி (Exynos 2400 SoC) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது. ஆனால், முந்தைய எஸ்25 சீரிஸ்களில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமே கிடைத்தது.

இதில் ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்க இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதிலும் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வர இருக்கிறது. இந்த கேமரா மட்டும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனில் பார்த்ததை போலவே இருக்கிறது. அதேபோல 3X ஆப்டிகல் ஜூமிங் கொடுக்க இருக்கிறது. மேலும், 12 எம்பி செல்பீ ஷூட்டர் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போனில் வர இருக்கிறது.

IP68 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட், 7.8 எம்எம் தடிமன் கொடுக்கும் ஸ்லிம் பாடி மற்றும் 190 கிராம் எடை வர இருக்கிறது. 4900mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் கொடுக்க இருக்கிறது. இந்த போனின் விலை விவரங்கள் கசியவில்லை. இருப்பினும், ஆரம்ப விலை ரூ.59,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. அறிமுக சலுகைகளும் கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 FE With 50MP Camera Expected Launch in September 2025 Full Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X