Home
Mobile

போன போச்சுனு விட்ராதீங்க.. ரூ.17,000 ரேட் கட்ல SAMSUNG போன்.. AMOLED டிஸ்பிளே.. 4900mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் தள்ளுபடி போக இதுவரையில் கிடைக்காத விலைக்கு வாங்க கிடைக்கிறது. டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 4,900mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் முழு பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.

8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.77,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.65,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு போக ரூ.5.000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.60,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

போன போச்சுனு விட்ராதீங்க.. ரூ.17,000 ரேட் கட்ல SAMSUNG போன்.. மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் (Dynamic AMOLED 2X) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளே மாடலுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கிடைக்கிறது.

மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. சாம்சங் நிறுவனத்தில் டெக்கா கோர் எக்ஸினோஸ் 2400 4என்எம் (Deca Core Exynos 2400 4nm) சிப்செட் மற்றும் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனானது, பிரீமியம் மாடலாக இருப்பதால், 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். அதேபோல 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 மாடல்களில் கிடைப்பதை போலவே இதிலும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமாரவில் 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங் கொண்ட 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மேலும், 30X டிஜிட்டல் ஜூம், 2X ஆப்டிகல் குவாலிட்டி ஜூம், ஆட்டோ போகஸ் போன்ற பீச்சர்களை பெற்று கொள்ளலாம். மேலும, ஏஐ ப்ரோவிசுவல் என்ஜின் (AI ProVisual Engine), கேலக்ஸி ஏஐ (Galaxy AI) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் ஜெமினி லைவ் (Gemini Live), நவ் பார் (Now Bar) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,900mAh பேட்டரி கிடைக்கிறது. ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging), வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனை நேவி (Navy), ஜேட் பிளாக் (Jet Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 FE With 50MP Camera Available With Rs 17000 Discounted Price Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X