Home
Mobile

சம்பவம் இருக்கு! 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. 12ஜிபி ரேம்.. வருகிறது புதிய Samsung போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய சாம்சங் போனின் சிப்செட், பேட்டரி மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 2400 எஸ்ஒசி (Exynos 2400 SoC) சிப்செட் உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

சம்பவம் இருக்கு! வருகிறது புதிய Samsung போன்.. எந்த மாடல்?

6.7-இன்ச் ஃபுல் டிச்டி பிளஸ் டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்பிளே (Dynamic AMOLED 2X display) உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080×2,340 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் (Corning Gorilla Glass Victus) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த புதிய சாம்சங் போனில் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவுடன் இந்த புதிய கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாகும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

4700எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் ப்ளூ, ஜெட் பிளாக்,நேவி மற்றும் ஒயிட் நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.60,000 பட்ஜெட்டில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனில் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இருக்கும். குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 FE specifications leaked: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X