Home
Mobile

வாவ்!.. மெர்சலா இருக்கு.. 45W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. அறிமுகமானது Samsung கேலக்ஸி எஸ்25 எப்இ.. என்ன விலை?

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய கேலக்ஸி எஸ்25 எப்இ போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் டிச்டி பிளஸ் டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்பிளே (Dynamic AMOLED 2X display) உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2340 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன் (Corning Gorilla Glass 2 Victus) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

வாவ்!.. மெர்சலா இருக்கு.. அறிமுகமானது Samsung கேலக்ஸி எஸ்25 எப்இ..

சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 2400 எஸ்ஒசி (Exynos 2400 SoC) சிப்செட் உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஜெனரேட்டிவ் எடிட் (Generative Edit), ஆடியோ ஏரேசர் (Audio Eraser) போன்ற பல அம்சங்கள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. பின்பு இந்த போனின் எடை 190 கிராம் ஆகும். ஐஸ் ப்ளூஇ ஜெட் பிளாக், நேவி, ஒயிட் நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போனை வாங்க முடியும்.

அதேபோல் One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஜெமினை லைவ் Gemini Live), உள்ளிட்ட பல்வேறு ஏஐ அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

4900mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஆகவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

வாவ்!.. மெர்சலா இருக்கு.. அறிமுகமானது Samsung கேலக்ஸி எஸ்25 எப்இ..

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 6இ, வைஃபை, புளூடூத் வி5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ விலை:
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போனின் விலை USD 649.99 (இந்திய மதிப்பில் ரூ.57,300)-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் USD 709.99 (இந்திய மதிப்பில் ரூ.62,575 ) விலையிலும், 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் USD 1018 (இந்திய மதிப்பில் ரூ.95,350) விலையிலும் வாங்க முடியும். விரைவில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 FE smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X