வந்துட்டான்.. மொத்த மார்க்கெட்டும் எதிர்பார்த்த புது Samsung போன்.. பல போன்களை காலி செய்யும் விலை!
இந்த மாத தொடக்கத்தில், சரியாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று, சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் "ஃபேன் எடிஷன்" ஸ்மார்ட்போன் (Fan Edition Smartphone) ஆக கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) மாடல் அறிமுகமாகி இருந்தது. அதன் இந்திய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஒருவேளை ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரீஸின் (iPhone 17 Series) இந்திய விலைகளை அறிவிக்கட்டும், அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம் என்று இன்னும் காத்திருகிறதோ என்னவோ தெரியவில்லை. இதற்கிடையில் நம்பகமான டிப்ஸ்டர் ஒருவரின் வழியாக கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Yogesh Brar) வெளியிட்டுள்ள விவரங்களின்படி, கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் இந்திய விலை ரூ.59,999 ஆக இருக்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்25 எப்இ மாடல் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி எஸ்24 எப்இ மாடலின் "அதே விலையில்" நாட்டில் விற்பனைக்கு வரும்.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த செப்டம்பர் 2024 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ரூ.59,999 ஆகும். இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.65,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
ஆக எப்படி பார்த்தாலும் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் விலை ஆப்பிளின் புதிய ஐபோன் 17 மாடலை (ரூ.82,900) விட மிகவும் குறைவாகவே இருக்கும். இது நிச்சயமாக ஐபோன் 17 மாடல்களின் விற்பனையை பாதிக்கக்கூடும். இதை எல்லாம் மனதில் வைத்து தான், ஆப்பிள் நிறுவனத்தின் செப்.9 வெளியீட்டு நிகழ்விற்கு முன்பாகவே சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்25 எப்இ மாடலை அறிமுகம் செய்துள்ளது போல!
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1,900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ ப்ரொடெக்ஷன்
- விஷன் பூஸ்டர்
- 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே
- எக்ஸினோஸ் 2400 சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 8
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா
- 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4,900mAh பேட்டரி
- எஸ்24 எப்இ மாடலை விட 10 சதவீதம் பெரிய வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி68 ரேட்டிங்
- அளவீட்டில் 7.4 மிமீ தடிமன்
- எடையில் சுமார் 190 கிராம்


Click it and Unblock the Notifications








