மொத்த மார்கெட்டும் இந்த SAMSUNG-க்கு வெயிட்டிங்.. 50MP கேமரா.. 4,00mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே எதிர்பார்த்து கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்கள் மட்டுமல்லாமல், வெளியீட்டு விவரங்களும் கசிந்துள்ளன. ஏனென்றால், போர்ச்சுகீஸ் மார்கெட்டில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. இதில் முழு பீச்சர்கள், விலை விவரங்களும் இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைக்கும்படி போர்ச்சுகீஸ் மார்கெட்டில் அது லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. அந்த மார்கெட்டில் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.81,999 பட்ஜெட்டில் இருக்கிறது. இது அந்த நாட்டின் கரென்சி அடிப்படையில் கொடுக்கப்பட்ட விலையாகும்.

ஆகவே, இந்திய மார்கெட்டில் வேறுபாடுகள் இருக்கலாம். இந்த விலையுடன் முழு பீச்சர்களும் வெளியாகி இருக்கின்றன. வழக்கமான டிரிபிள் ரியர் கேமராவுடன் நேவி (Navy), டார்க் ப்ளூ (Dark Blue), லைட் ப்ளூ (Light Blue), ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த மார்கெட் அடிப்படையில் என்னென்ன பீச்சர்கள் இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) கிடைக்க இருக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட எக்ஸினோஸ் 2400 (Exynos 2400) சிப்செட் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. 8 எம்பி டெலிபோட்டோ வருகிறது.
இதில் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைன் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்க இருக்கிறது. 4,900mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது.
மேலும், 25W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வர இருக்கிறது. முன்னதாக செப்டம்பர் 19ஆம் தேதி இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போது, அதற்கு முன்னதாகவே செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கின்றன. இதனால் சாம்சங் பிரியர்கள் படுகுஷியில் இருக்கின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25), சாம்சங் கேலக்ஸி எஸ்25+ (Samsung Galaxy S25+) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடல்கள் இந்தியா உள்பட அனைத்து மார்ரெட்டிலும் வெளியாகிவிட்டன. ஆனால், இந்த மாடல்களின் விலை பிரீமியமாக இருப்பதால், எப்இ மாடலுக்கு எதிர்பார்ப்பு கிளம்பியது.
ஆகவே, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ எப்போது வெளியாகும், அந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் எப்படி இருக்கும், பட்ஜெட் செக்மெண்ட் எப்படி இருக்கும், உள்ளிட்ட எதிர்பார்ப்பு சாம்சங் பிரியர்களிடையே எகிறியது. இப்போது, இந்த விவரங்கள் கசிந்து எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது. செப்டம்பர் 4ஆம் தேதி உண்மை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications








