பெரிய மனுஷன் பண்ணுற வேலையா இது.. 1 வருஷம் பழைய Chipset.. Samsung ரசிகர்கள் ஷாக்.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் எப்இ மாடல்களை (FE Models) பற்றி பலருக்கும் அறிமுகம் தேவைப்படாது என்று நம்புகிறோம், குறிப்பாக பட்ஜெட் விரும்பிகளுக்கு! சாம்சங் கேலக்ஸி எஸ் சீரீஸ்-ன் (Samsung Galaxy S Series) கீழ் விலை உயர்ந்த மாடலாக அறிமுகமாகும் ஸ்மார்ட்போன், சற்றே மலிவான விலையில் ஃபேன் எடிஷன் ஆக (சுருக்கமாக FE மாடல்களாக) அறிமுகம் செய்யப்படும்.
உதாரணத்திற்கு, சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) மாடல் வெளியானது. இதேபோல தான். சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) மாடல் அறிமுகமானது. இப்படிப்பட்ட எப்இ மாடல்களுக்கெனவே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அந்த ரசிகர் கூட்டத்தின் அடுத்தக்குறி - சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போன் தான். ஆனால் அவர்களை எல்லாம் அப்படியே அப்செட் செய்யும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் என்ன சிப்செட் (Samsung Galaxy S25 FE Chipset) பயன்படுத்தப்படும் என்பது குறித்த தகவலாகும்.
ஒரு புதிய லீக்கின் படி, கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 2400இ சிப்செய் (Exynos 2400e SoC) இடம்பெறலாம். அதாவது கடந்த அக்டோபர் 2024 இல் அறிமுகமான எஸ்24 எப்இ மாடலில் உள்ள அதே சிப்செட் எஸ்25 எப்இ மாடலிலும் பயன்படுத்தப்படலாம்.
ஆக இந்த ஆண்டு வெளியாகும் எப்இ மாடலில் ஏதேனும் அப்கிரேட்கள் இருந்தாலும் கூட, அவைகள் நிச்சயமாக சிப்செட் டிப்பார்ட்மென்ட்டில் இருக்காது. இந்த தகவல் வெறும் வதந்தியாக இருக்கலாம் என்று நம்புவதற்கு எங்களுக்கும் ஆசை தான். ஆனால் கேலக்ஸி இசட் ஃபிளிப் எஃப்இ (அல்லது இசட் ஃபிளிப்7 எஃப்இ) ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 2400இ சிப்செட் பயன்படுத்தப்படலாம் என்கிற லீக் தகவல் பலமுறை கிடைத்துள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
கேலக்ஸி எஸ்25 எப்இ மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது, டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (@UniverseIce) வழியாக கிடைத்த தகவலின்படி, எட்ஜ் மாடலின் விலை, கடந்த 2025 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலை போலவே இருக்கும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.87,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 6.65 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் உள்ள அதே 6.7 இன்ச் டிஸ்ப்ளேவை பேக் செய்யும் என்பது போல் தெரிகிறது.
இருப்பினும், வரவிருக்கும் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் வேரியண்ட் ஆனது கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலை போலவே குறுகிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் குறிப்பிட்டுள்ளார். அளவு மற்றும் எடையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஆனது 5.84 மிமீ தடிமனாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலுடன் ஒப்பிடும்போது 1.46 மிமீ வேறுபாடு வேறுபாடு உள்ளது..
மேலும் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 162 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார், இது பிளஸ் வேரியண்டின் 195 கிராம் எடையை விட மிகவும் குறைவாகும். இந்த இடத்தில், வரவிருக்கும் எட்ஜ் மாடல் ஆனது கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் உள்ளதை விட சிறிய அளவிலான பேட்டரியுடன் வரும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications