7.4மிமீ ஸ்லிம் டிசைனில் குட்டி 4,900mAh பேட்டரி.. ஆனா வெயிட்டான கேமரா.. Samsung-ன் புது போன்.. எந்த மாடல்?
நிச்சயமாக சாம்சங் (Samsung) நிறுவனம் இந்நேரத்திற்கு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும். ஏனென்றால் ஆப்பிள் (Apple) அதன் ஐபோன் 17 சீரீஸின் (iPhone 17 Series) அறிமுக தேதியை அறிவித்துவிட்டது. போதாக்குறைக்கு கூகுள் (Google) நிறுவனத்தின் பிக்சல் 10 சீரீஸின் (Pixel 10 Series) விற்பனையும் தொடங்கி விட்டது.
ஆக ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு எதிராக.. இப்போதைக்கு சாம்சங் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் - கேலக்ஸி எஸ்25 எப்இ (Galaxy S25 FE) ஸ்மார்ட்போன் தான். இது கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பது குறிக்கும் பல லீக்ஸ் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில்.. அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக கேலக்ஸி எஸ்25 எப்இஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள் மற்றும் அறிமுக தேதி குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

அதன்படி, அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஆப்ஷன் $649.99 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,960 க்கும் (ஆக இந்தியாவில் ரூ.60000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரலாம்) மற்றும் 256ஜிபி ஆப்ஷன் $709.99 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.62,220 க்கும் அறிமுகம் செய்யப்படும்.
மேற்கண்ட 2 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே 8ஜிபி ரேம் உடன் வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: ஜெட் பிளாக் (Jet Black), ஐஸ் ப்ளூ (Ice Blue), நேவி (Navy) மற்றும் டைட்டானியம் (Titanium).
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ எப்போது அறிமுகமாகும்? இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான முந்தைய லீக்ஸ் தகவல்கள், இது 2025 செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கின்றன. கடந்தமுறை "இதே காலகட்டத்தில்" தான் கேலக்ஸி எஸ்24 எப்இ அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை மனதில் கொண்டால், இந்த லீக்ஸ்கள் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.7-இன்ச் FHD+ (2340 x 1080) AMOLED டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் ப்ரொடெக்ஷன் உடன் வரலாம்
சிப்செட்டை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 2400 (Exynos 2400) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி எஸ்24 (Galaxy S24) மற்றும் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Galaxy S24 Plus) ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்ட அதே சிப் ஆகும்.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஆனது ஆண்ட்ராய்டு 16 அவுட் ஆப் பாக்ஸ் உடன் அனுப்பப்படும், இது சாம்சங்கின் ஒன் யுஐ 8 (One UI 8) ஓஎஸ் கொண்டு இயங்கலாம். கேமராக்களை பொறுத்தவரை இது சாம்சங்கின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் கட்டமைப்பை பிரதிபலிக்கும்; இருப்பினும் டிரிம் செய்யப்பட்ட வடிவத்தை பெறும்
அப்படியாக, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில்,50MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP டெலிஃபோட்டோ இடம்பெறலாம். முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமராவானது, டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் நிலைநிறுத்தப்படலாம்
பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 4,900mAh யூனிட்டை பேக் செய்யலாம். இது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இணைக்கப்படலாம். டிசைனை பொறுத்தவரை, இந்த போனின் பாடி 7.4 மிமீ தடிமன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது கேலக்ஸி எஸ்25 சீரிஸின் கீழ் வெளியான மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போனாக இருக்கும்
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸின் உள்ளே - சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனுடன் யூஎஸ்பி டைப்-சி டூ யூஎஸ்பி டைப்-சி கேபிள் மற்றும் சிம் எஜெக்டர் டூலை எதிர்பார்க்கலாம். இது சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனுடன் சார்ஜர்களை தவிர்ப்பதற்கான போக்கை தொடரும். அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ உடன் சார்ஜர் வராது என்று அர்த்தம்.


Click it and Unblock the Notifications








