செம்ம டிவிஸ்டு.. ஸ்லிம் டிசைன் உடன் இன்னொரு புது Samsung போன்.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்த புதிய ஸ்மார்ட்போன்கள் ஆக கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7, கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ ஆகிய மாடல்கள் தான் அறிமுகமாகும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருந்தால்.. உங்களுக்கு ஒரு டிவிஸ்டு!
வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடக்கலாம் என்று கூறப்படும் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில், மேற்குறிப்பிட்ட 3 ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து மொத்தம் 11 புதிய தயாரிப்புகள் அறிவிக்கப்படலாம் என்கிற தகவல்கள் வெளியான வேகத்தில்.. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது!

பெரும்பாலும் இது அடுத்த மாதம் நடைபெறும் சாம்சங்கின் கேலக்ஸி அன்பேக்டு வெளியாகாது என்றாலும் கூட, ஆன்லைனில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் சிஏடி அடிப்படையிலான ரெண்டர்கள் (புகைப்படங்கள்) வழியாக, இது என்ன மாதிரியான டிசைனை கொண்டிருக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்பது பற்றிய ஒரு யோசனையை நமக்கு தருகின்றன, குறைந்தபட்சம் வடிவமைப்பு வாரியாக.
முதல் பார்வையிலேயே, டிசைன் வாரியாக, கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனுக்கும் அதன் முன்னோடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மட்டுமே உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 7.4 மிமீ தடிமனை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது எஸ்24 எப்இ மாடலின் 8மிமீ உடன் ஒப்பிடும் போது சற்றே ஸ்லிம் ஆன டிசைனை கொண்டிருக்கும்.
மேலும் இன்னும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்க சாம்சங் நிறுவனம் அதன் புதிய மாடலில் முன்பக்க பெசல்களை இன்னும் சற்று ட்ரிம் செய்யலாம். இப்படி சில மாற்றங்கள் இருந்தபோதிலும், எஸ்25 பிஇ மாடல் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவை தக்கவைத்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் "ஒருவழியாக" சாம்சங் நிறுவனம் அதன் செல்பீ கேமராவை 10எம்பி-யில் இருந்து 12எம்பி ஆக மேம்படுத்தலாம். அதாவது வரவிருக்கும் எப்இ மாடலில் கேலக்ஸி எஸ்25 மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல்களுடன் ஒற்றுப்போகும். ரியர் கேமரா செட்டப்பை பொறுத்தவரை, 12எம்பி அல்ட்ராவைடு மற்றும் 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் இணைக்கப்பட்ட 50எம்பி ப்ரைமரி கேமராவை எதிர்பார்க்கலாம்!
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
-எக்சினோஸ் 2400 (Exynos 2400) அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 9400 (MediaTek Dimensity 9400) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மேலும் இது ஒன் யுஐ 8 (One UI 8) அப்டேட் உடன் அனுப்பிவைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் சாம்சங்நிறுவனத்தின் மற்ற லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை போலவே, கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனும் நிறுவனத்தின் நீட்டிக்கப்பட்ட மென்பொருள் வாக்குறுதியிலிருந்து பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது ஏழு ஆண்டுகள் ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும். இது 2025 ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் தான் வெளியாகும்.
2025 ஜூலை 9 ஆம் தேதி நடக்கலாம் என்று கூறப்படும் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் என்னென்ன அறிவிப்புகளை / அறிமுகங்கள் எதிர்பார்க்கலாம்? 3 புதிய கேலக்ஸி இஸட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து, கேலக்ஸி வாட்ச் 8 சீரிஸின் கீழ் கேலக்ஸி வாட்ச் 8 (Galaxy Watch 8), கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் (Galaxy Watch 8 Classic) மற்றும் கேலக்ஸி வாட்ச் 8 அல்ட்ரா 2025 (Galaxy Watch Ultra 2025) மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
கூடவே கேலக்ஸி பட்ஸ் கோர் (Galaxy Buds Core) மற்றும் கேலக்ஸி பட்ஸ் 3 எப்இ (Galaxy Buds 3 FE) மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம்.இந்த நிகழ்வின் போது சாம்சங் பிராண்ட் ஆனது அதன் முதல் எக்ஸ்ஆர் ஹெட்செட், ப்ராஜெக்ட் மூஹன் மற்றும் அதன் ட்ரை-ஃபோல்டு போனை காட்சிப்படுத்தும் என்றும் வதந்திகள் உள்ளன. அதாவது இந்த 3 அறிமுகங்கள் உடன் சேர்ந்து 3 ஸ்மார்ட்போன்கள், 3 ஸ்மார்ட் வாட்ச்கள், 2 இயர்பட்ஸ்கள் என மொத்தம் 11 அறிமுகங்கள் நடக்கலாம்.


Click it and Unblock the Notifications