மொத்த மார்கெட் வெயிட்டிங்.. அடுத்த SAMSUNG.. 4500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. என்னென்ன கலர்?
ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) மாடலின் டிசைன் மற்றும் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே, டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் போன்ற பீச்சர்கள் கசிந்து, மார்கெட்டை மிரள வைத்தது. இப்போது, கலர் விவரங்கள் கசிந்து, வெளியீடு நெருங்குவதை உறுதி செய்திருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25), சாம்சங் கேலக்ஸி எஸ்25+ (Samsung Galaxy S25+) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஆகிய மாடல்கள் வெளியாகின. இந்த மாடல்கள் வழக்கம்போல பிரீமியம் செக்மெண்ட்டில் வெளியாகியதால், விலையும் அதற்கு ஏற்ப இருந்தன.

இதனால், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் சாம்சங் மாடல்களை விரும்பும் கஸ்டமர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ மாடல்களுக்கு காத்திருந்தனர். ஆனால், அடுத்து வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடலின் விலையும் ரூ.1,00,000 பட்ஜெட்டில் இருந்தது.
ஆகவே, இறுதி வாய்ப்பாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ மாடலுக்கு இப்போது எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த கேலக்ஸி போன் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ விவரங்களையும் சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், வெளியீடு நெருங்குவதை சொல்லாமல், சொல்லும்படி அதன் பீச்சர்கள் கசிந்து வருகின்றன.
முன்னதாக சிப்செட், பேட்டரி, சிப்செட் போன்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தன. இப்போது, டிசைன் மற்றும் கலர் விவரங்கள் கசிந்து இருக்கின்றன. இது வழக்கமான எப்இ மாடல்களை போலவே டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் மெட்டாலிக் மிடில் ஃபிரேம் கொடுக்க இருக்கின்றன. கலர்களை பார்க்கையில், புதிதாக ஒரு கலர் சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது, முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு7 (Samsung Galaxy Z Fold 7) மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்7 (Samsung Galaxy Z Flip 7) ஆகிய மாடல்களில் கிடைத்த ப்ளூ ஷேடோவை போல இதில் டார்க் ப்ளூ (Dark Blue) கலர் கிடைக்க இருக்கிறது. இதுபோக பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் லைட் ப்ளூ (Light Blue) கலர்கள் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): இந்த கேலக்ஸி போனில் 2,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்க இருக்கிறது. ஆகவே, பிரீமியம் டிஸ்பிளேவாக இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) இடம்பெற வாய்ப்புள்ளது. அதேபோல எக்ஸினோஸ் 2400 (Exynos 2400) சிப்செட் கிடைக்க இருக்கிறது. லேட்டஸ்ட் ஒன் யுஐ 8.0 (One UI 8.0) வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கிடைக்க இருக்கிறது. 4,500mAh மற்றும் 45W சார்ஜிங் வருகிறது.
IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்கள் அனைத்தும் இந்த மாடலிலும் வர இருக்கிறது. கூகுள் பிக்சல் 9ஏ மாடலுக்கு போட்டியாக இந்த மாடல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே.


Click it and Unblock the Notifications








