அடேய் சாமி.. ரூ.20,000 விலை குறைப்பு.. 5.8 மிமீ பாடி.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத விலை குறைப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. வெறும் 5.8 மிமீ பாடியில் 3900mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 200 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.89,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,000 நேரடி விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.4,000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.85,999 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge Specifications): 3என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (3nm Octa Core Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றம் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) கொடுக்கப்பட்டு உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 (Corning Gorilla Glass Ceramic 2) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) இன்பிளிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
200 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 2X ஆப்டிகல் குவாலிட்டி ஜூம் (Optical Quality Zoom) கிடைத்துள்ளது. அல்ட்ரா வைடு கேமராவிலும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது.
4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஏஐ என்ஹான்ஸ்டு ப்ரோவிசுவல் என்ஜின் (AI Enhanced ProVisual Engine) கிடைத்துள்ளது. மேலும், ஏஐ ஜூம் சொலூஷன் (AI Zoom Solution) கிடைக்கிறது. ஆடியோ எரைசர் (Audio Eraser), ஆட்டோ டிரிம் (Auto Trim) கிடைக்கிறது. கேலக்ஸி ஏஐ (Galaxy AI) கொடுக்கப்பட்டு உள்ளது. ஜெமினி ஏஐ ப்ரோ (Gemini AI Pro) சந்தா உள்ளது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 12 எம்பி செல்பீ ஷூட்டர் கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 3900mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging) உள்ளது.
மேலும், வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) கொடுக்கப்பட்டு உள்ளது. வெறும் 5.8 எம்எம் தடிமன் மற்றும் 163 கிராம் எடையை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கொடுக்கப்பட்டு உள்ளது. டைட்டானியம் சில்வர் (Titanium Silver), டைட்டானியம் ஜேட் பிளாக் (Titanium Jetblack) கலர்களில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications